உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புகழுக்காக கணிப்புகளை வெளியிடக்கூடாது! தனியார் ஆர்வலர்களுக்கு வானிலை மையம் அட்வைஸ்

புகழுக்காக கணிப்புகளை வெளியிடக்கூடாது! தனியார் ஆர்வலர்களுக்கு வானிலை மையம் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தனியார் வானிலை ஆர்வலர்கள் புகழுக்காக வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் மழை, வெயில் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது வழக்கம். புயல், சூறாவளி, பெரும் வெள்ளம் போன்ற இடர்பாடான காலங்களில் தனியார் வானிலை ஆர்வலர்கள், மத்திய அரசின் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு இணையாக கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு தனியார் வானிலை ஆர்வலர்களின் கணிப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந் நிலையில், புகழுக்காக தனியார் வானிலை ஆர்வலர்கள் காலநிலை பற்றிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; மழைக்காலங்களில் வானிலை கணிப்புகள் என்பது அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும். தனியார் வானிலை ஆர்வலர்கள் புகழுக்காக பேசுவதை மக்கள் பொருட்படுத்தக்கூடாது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜன.30, 31 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த 2 நாட்களும் வட தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்தவரை இன்றும்(ஜன.28), நாளையும் (ஜன.29) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S. Venugopal
ஜன 28, 2025 20:08

வானிலை கணிப்புக்கள் அறிவியல்பூர்வமாக இருக்கவேண்டும். தனியார் ஆர்வலர்கள் இந்திய வானிலை துறை ஐ எம் டி யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்களின் மூலம் பெறப்பட்ட வானிலை கணிப்புகளை மட்டுமே வெளியிடவேண்டும் என கூறலாம்.


Ray
ஜன 28, 2025 18:59

இவர் லீவுல போய்ட்டாருன்னாகூட வேறு யாரும் வானிலை அறிக்கையை டிவி ல வாசிக்க கூடாதுன்னட்டாராமே ஏன்?


அப்பாவி
ஜன 28, 2025 18:56

இவிங்க கணிப்புகளை விட அவிங்க கணிப்பு நல்லாவே இருக்கு. நம்புவதும் நம்பாததும் அவிங்கவங்க இஷ்டம்.


Sundar R
ஜன 28, 2025 13:53

வானிலை மையத் தலைவர் திரு பாலசந்திரன் அவர்கள் சொல்வது முற்றிலும் சரியானதே. மழை முன்னறிவிப்பிலும் ஃபிராடுகளின் மாற்று ஏற்பாடா? மத்திய அரசு CBSE பாடத்திட்டத்தை நாடு முழுவதும் ஏற்கும் வகையில் கொண்டு வந்தால் தமிழகத்திற்கு மட்டும் மாநில பாடத்திட்டம் என்று ஒரு ஃப்ராடு ஏற்பாடு. மத்திய அரசு நாடு முழுவதும் நீட் தேர்வு கொண்டு வந்தால், தமிழகத்தில் கல்லூரி ஓனர்களும், ஃப்ராடுகளும் எதிர்க்கிறார்கள். EWS இட ஒதுக்கீடு நாடு முழுவதும் இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் எதிர்க்கும் ஃப்ராடுகள். அதேபோல் மழை முன்னெச்சரிக்கை சொல்ல மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி இயக்குனரகம் நுங்கம்பாக்கம் & மீனம்பாக்கத்தில் இருந்து பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள highly sophisticated equipments வைத்துக் கொண்டு ஏராளமான ஆராய்ச்சி விஞ்ஞானிகள் வானிலை முன்னெச்சரிக்கையைக் துல்லியமாக மூன்று மணிநேர கால அளவிற்கு சொல்கிறார்கள். நமக்கு இந்த தகவல் போதும். ஆனால் வெறும் கையோடோ அல்லது வேறு ஏதோடோ, வானிலை முன்னறிவிப்பு சொல்ல வெதர்மேன் என்று ஒருவன் எங்கிருந்து வந்தான்? அவன் துல்லியமாக சொல்லுவானா? அவன் வானிலை அறிவிப்பு மட்டும் தான் சொல்லணும். ஆனால் இன்று, "20 செமீ மழை வரைக்கும் பிரச்சினை இல்லை. 40, 50 செமீக்கு மேல் போனால் தான் நீங்கள் உஷாராக இருக்கணும். அப்படி இப்படி என்று ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரன் மாதிரி பேசுகிறான். பல கோடி ரூபாய் மதிப்பில் equipments வைத்துக் கொண்டு மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதைக் கேட்காமல் கட்சி சார்புடைய ஃப்ராடுகள் சொல்வதைக் கேட்டு ஏமாறாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் நிறுவனத்தின் பெயரே "வானிலை ஆராய்ச்சி நிலையம்". பாரதம் முழுவதும் எந்த மாநிலத்திலும் மத்திய அரசு நமக்குக் கொடுக்கும் வசதி வாய்ப்புகளை, நம் தமிழக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குறுக்கே புகுந்து தட்டிப் பறிக்கும் குரங்குகள் போன்று ரகளைகள் செய்யும் ஃப்ராடுகள் நம் தமிழகத்தில் மட்டும் தான் உண்டு. இந்த ஃப்ராடுகளை விரட்டி அடித்தால் தான், நல்லது மட்டும் நம் கண்களுக்கு புலப்படும். அப்போது தான் தமிழக மக்கள் நலமுடன் வாழ்வார்கள். ப்ராடுகளை ஒழித்து நலமுடன் வாழ்வோம்.


புதிய வீடியோ