அ.தி.மு.க.,வில் தொண்டர்கள்தான் தலைவர்களாக வருவர்
அண்ணாமலை என்பவர் ஒரு தேசிய கட்சியின் தலைவர். அவர் மூன்று ஆண்டுகள் இருப்பார். அதன் பிறகு போய்விடுவார். நடிகர் விஜய் இப்போது தான், கட்சியை தொடங்கி இருக்கிறார். தி.மு.க.,வில் உதயநிதி தனிப்பட்ட உழைப்பால், இந்த இடத்திற்கு வரவில்லை. தாத்தா, தந்தை, அடுத்து மகன் என்ற நிலையில் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல்.ஆனால், அ.தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி, இங்கு வாரிசு அரசியல் இல்லை. முன்னாள் முதல்-வர், எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கி, மறைந்தபோது அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. அதேபோல், முன்னாள் முதல்-வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. இந்த கட்சியில் உழைப்பவர்கள் தான் தலைவராக வந்திருக்கின்றனர். அடுத்த தலைமுறை வரும்போது, தலைவர்கள் தானாக வருவர்.கே.பி.முனுசாமி, துணைப் பொதுச்செயலர், அ.தி.மு.க.,