கரும்புக்கு ஊக்கத்தொகை
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு, டன்னுக்கு 709 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. ‘கரும்பு உற்பத்தியை அதிகரிக்க, 2025 – 26ம் ஆண்டு அரவை பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன்னுக்கு 709 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என, முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் இன்று (நவ.,4) தொடங்கி வைத்தார். மூன்று கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார். இந்த திட்டம் வாயிலாக, மாநிலம் முழுதும், 85 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர். இதற்காக, நடப்பாண்டு 603 கோடி ரூபாய், அரசிற்கு கூடுதல் செலவு ஏற்படும்.