உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி; வருமான வரித்துறை அதிகாரிகள், எஸ்.ஐ., சிக்கினர்!

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி; வருமான வரித்துறை அதிகாரிகள், எஸ்.ஐ., சிக்கினர்!

சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், எஸ்.ஐ., மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் ரூ.20 லட்சம் கொண்டு சென்றவரை வருமானவரித்துறை அதிகாரிகள் மடக்கி உள்ளனர். அவரிடம் இருந்து மிரட்டி பணம் பெற்றுள்ளனர். இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 3 பேர் மற்றும் திருவல்லிக்கேணி எஸ்.ஐ., ராஜா சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், இன்று (டிச.,18) எஸ்.ஐ., மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ponssasi
டிச 18, 2024 17:13

காவல்துறைதான் உள்ளேயும் வாங்குவார்கள் வெளியிலும் வாங்குவார்கள், வருமானவரித்துறை அலுவலகத்தில் மட்டுமே வாங்குபவர்கள். இப்போதெல்லாம் வருமானவரி துறை பக்கம் யாரும் செல்வதில்லை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது, இங்குள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்கும் அதிகாரமும் இல்லை அனைத்தும் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகம் பார்த்துக்கொள்கிறது. அதனால் இவர்களும் சாலைக்கு வந்துவிட்டார்கள் போலும்


Anantharaman Srinivasan
டிச 18, 2024 14:44

வேலியே பயிரை மேய்ந்தது. திருவல்லிக்கேணி எஸ்.ஐ., மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர், மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


புதிய வீடியோ