மேலும் செய்திகள்
பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க பயிற்சி
18-Jul-2025
பொள்ளாச்சி,:ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மேற்பார்வையாளருக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணிக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக, வருவாய்துறை, அங்கன்வாடி, சத்துணவு மைய பணியாளர்கள், தபால் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், ஆண்டுதோறும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, பி.எல்.ஓ.,க்களுக்கு ஆண்டுக்கு, 7,550 ரூபாய், மேற்பார்வையாளர்களுக்கு, 12,000 ரூபாய் மதிப்பூதியமாக தேர்தல் ஆணையம் மூலமாக வழங்கப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ளும் பி.எல்.ஓ., மற்றும் மேற்பார்வையாளர்கள் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். 2023ல் பொள்ளாச்சி வந்த தலைமை தேர்தல் அதிகாரி யிடம், பி.எல்.ஓ.,க்கள் சார்பில், மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம், மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில் பி.எல்.ஓ.,க்களுக்கு, 12,000 ரூபாய், பி.எல்.ஓ., மேற்பார்வையாளர்களுக்கு, 18,000 ரூபாய், சிறப்பு முகாம்கள் நடத்தும் போது, ஊக்கத்தொகையாக, 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
18-Jul-2025