உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்பூசணி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.20க்கு விற்பனை

தர்பூசணி வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.20க்கு விற்பனை

சென்னை : தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு பின், தர்பூசணி, கிர்ணி, முலாம் பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. கோடை காலம் துவங்கிய நிலையில், தர்பூசணி பழங்களின் விளைச்சல் களைகட்டியுள்ளது. ஆந்திராவிலும் தர்பூசணி அறுவடை துவங்கியுள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தர்பூசணி பழத்தின் வரத்து அதிகரித்து உள்ளது. இங்கு, கிலோ 10 - 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாகனங்களில் பழம் வியாபாரம் செய்பவர்கள், நேரடியாக வயல்களுக்கு சென்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவிற்கும் சென்று தர்பூசணியை கொள்முதல் செய்து, சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.இதனால், கிலோ தர்பூசணி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி