உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; விஜய் வேதனை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; விஜய் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழகத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4sertpzu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வன்முறைகள்

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

தனி இணையத்தளம்

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
நவ 25, 2024 17:48

இப்படி வன்முறை அதிகரிப்புக்கு என்ன காரணம் 1 சினிமாவில் காண்பிக்கப்படும் வன்முறை செயல் யுக்திகள் 2 சினிமா நடிக நடிகைகளின் பணத்துக்காக செய்யும் இழிவான செய்திகள் பேப்பரில் கேவலமாக வருவதால் 3 திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் செயல்பாடுகளால் 4 திருட்டு அறிவிலி மடியில் அரசு அடிமை போலீஸ் கையாலாகத்தனத்தால் அதாவது திமுக ஆள் என்றால் அவனை விட்டு விடுவது என்ன குற்றம் செய்தாலும் என்ற செயல்பாட்டினால்


என்றும் இந்தியன்
நவ 25, 2024 17:42

சொல்றது யாரு???ஜோசப்??? உங்க ......தானே இதற்கு காரணம் என்று தெரியுமா ???


Anand
நவ 25, 2024 17:08

இதுதாண் மாடல் ஆட்சி, அதுசரி நீ எப்போ அவிங்களோட கூட்டணி அமைக்கப்போறே?


V GOPALAN
நவ 25, 2024 14:34

ஜோசப் விஜயைக்கு தெரியுமா சர்ச் பாதிரியார் மூலம் எண்ணற்ற இளம் பெண்கள் பாலியல் கொடுமைக்கு அடிபடுகிறார்கள்


Rpalnivelu
நவ 25, 2024 14:18

விஜய் ஒரு அறிக்கை நாயகனாகி விட்டார். எழுதி வச்சு படிப்பதெலாம் வேலைக்காகாது. அண்ணாமலை மாதிரி அழுத்தம் திருத்தமா பேச கத்துக்குங்க.


BHARATH
நவ 25, 2024 13:45

முதல்ல உன் படத்தில் உள்ள ஆபாச காட்சிகளை சென்சார் பண்ண சொல்லு. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்


SUBRAMANIAN P
நவ 25, 2024 13:32

வேதனைப்பட்டா போதாது. வீதியில் இறங்கி போராடனும். பெண்கள் குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை எழுதி அதை அமல்படுத்தி விரைவில் தண்டனையை நிறைவேற்ற திருத்தம் செய்ய போராடனும். வெற்று அறிக்கை எங்க முதல்வர் கூடத்தான் கொடுப்பாரு. அதுக்கு எதுக்கு நீங்க. MR.VIJAY


Ramesh Sargam
நவ 25, 2024 12:49

சினிமா படத்தில் காட்டும் அந்த சினிமா காட்சிகளை, படம் பார்க்கும் உங்கள் அபிமானிகள்தான் அதை வெளிப்படையாக, உண்மை நிகழ்வாக செய்கின்றனர். ஆக பொதுவாக சினிமா கெட்டது. ஆக பொதுவாக சினிமாக்காரர்கள் கெட்டவர்கள்.


Rajarajan
நவ 25, 2024 12:45

அண்ணா, வணக்கங்கண்ணா. இருக்கீங்களான்னா? இந்தியாவுலயே தமிழகம் தான் கடன் சுமையில் மொதல்ல இருக்குங்களான்னா. இது விலைவாசி மற்றும் வரியா மக்கள் மேல விழுங்கண்ணா. குறிப்பா குடும்ப பெண்கள் எப்படி சமாளிப்பாங்கன்னா? இது பொருளாதார தாக்குதல் இல்லையாங்கன்னா? இதுபற்றி உங்க கருத்து என்னங்கண்ணா ??


முருகன்
நவ 25, 2024 12:34

ஏன் இந்த திடீர் கரிசனம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை