உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துங்க; மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துங்க; மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.சென்னையில் நடந்த தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக, நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முக்கியமான திட்டங்களை தீட்டி அதனை நிறைவேற்றுவது மாநில அரசின் கையில் தான் உள்ளது. வரி பகிர்வு முறையாக வழங்காத காரணத்தினால், மாநிலங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் மூலம், மாநிலங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

வரி பகிர்வு வீழ்ச்சி

போதிய அளவு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் தமிழகத்தின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வரி பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். மத்திய அரசு குறைந்த அளவு நிதி வழங்குகிறது. 41 சதவீதம் நிதி பகிர்வு வழங்க வேண்டும் என முடிவு செய்தாலும், 33.16% மட்டுமே வழங்கப்பட்டது. தமிழகத்திற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

50 சதவீதம்

நிதி குழு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தற்போதைய வரி பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பது போல் உள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கு சமச்சீரான வரி பகிர்வு அளிக்க வேண்டும். வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத வகையில், புதிய அணுகுமுறை தேவை. இயற்கை பேரிடர்களால் மாநில கட்டமைப்பு வசதிகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன.

நிதி ஒதுக்கவில்லை

வரி பகிர்வு மாநில அரசின் செயல்பாட்டை தொய்வடைய செய்கிறது. கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரி பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை. இயற்கை பேரிடரை சந்திக்கும் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. இயற்கை பேரிடரால் ஏற்படும் இழப்புகளை சீரமைக்க உரிய நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Madras Madra
நவ 19, 2024 10:21

இந்த கோரிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது தமிழகத்தில் கொங்கு மண்டலம் அதிக பகிர்வை கேட்டு போராடினால் எவ்வளவு தவறோ அதை விட தவறு இந்த கோரிக்கை மத்திய அரசு பகிர்வுக்கு மேலே மாநிலங்களுக்கு செலவு செய்வதை நிறுத்தி விட்டால் மக்களை மாநில அரசுகளுக்கு அடிமையாய் வைத்திருக்க முடியும் அதுவும் இல்லாமல் பாதுகாப்பு விஞ்ஞானம் அணுசக்தி விண்வெளி ஆராய்ச்சி வெளிநாட்டு உறவு என்று பல செலவுகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்பது போல் பேசுவது தவறு


Madras Madra
நவ 19, 2024 10:21

இந்த கோரிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது தமிழகத்தில் கொங்கு மண்டலம் அதிக பகிர்வை கேட்டு போராடினால் எவ்வளவு தவறோ அதை விட தவறு இந்த கோரிக்கை மத்திய அரசு பகிர்வுக்கு மேலே மாநிலங்களுக்கு செலவு செய்வதை நிறுத்தி விட்டால் மக்களை மாநில அரசுகளுக்கு அடிமை யாய் வைத்திருக்க முடியும் அதுவும் இல்லாமல் பாதுகாப்பு விஞ்ஞானம் அணுசக்தி விண்வெளி ஆராய்ச்சி வெளிநாட்டு உறவு என்று பல செலவுகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்பது போல் பேசுவது தவறு


Suresh Sivakumar
நவ 19, 2024 05:40

Why? Not happy of enough of stealing? I strongly believe in giving capital punishments to the politicians for their corrupt attitude.


Ramesh Sargam
நவ 18, 2024 22:02

ஆம், இன்னும் இவர் தந்தைக்கு பல இடங்களில் சிலை வைக்கவேண்டும்.


Madhavan
நவ 18, 2024 20:13

இவர்கள் ஏதோ இட ஒதுக்கீடு போல இதையும் அவ்வப்போது உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்...நிதி ஆயோக் கமிட்டி கூட்டத்தில் பேச வேண்டியதுதானே.. அல்லது நேரிடையாக நமது நிதியமைச்சரைப் பார்த்து பார்லிமென்ட்டில் தமிழிலேயே கேள்வி கேட்க வேண்டியதுதானே..


Dharmavaan
நவ 18, 2024 18:42

வரி பகிர்வு பற்றி யாராவது சரியாக விளக்க முடியுமா .ஏன் மத்திய அரசு பதில் தருவதில்லை இதற்கு


Dharmavaan
நவ 18, 2024 18:39

ஓட்டை கை நீ கொள்ளை அடித்துக்கொண்டேயிருந்தால் எப்படி போதும் திட்டங்களுக்கு


Rpalnivelu
நவ 18, 2024 18:37

வருஷத்திற்கு 30000 கோடி போதலையோ? உங்க குடும்பம் ரொம்ப பெருசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு


சாண்டில்யன்
நவ 19, 2024 02:38

நிதி குடுக்காததுக்கு இது ஒரு நொண்டி சாக்கா மேல உக்கார்த்திருக்கிற பிராமணர்கள் சொல்கிறார்கள் அதை நம்பி இது ஒரு கீறல் விழுந்த ரெக்கார்டு கிளிப்பிள்ளை போல யாராவது சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டிருக்கும் இப்படி சொல்லி பிஜேபிக்கு சொம்படிச்சா இவரையும் மேல் ஜாதின்னு சேர்த்துக் கொள்ள போகிறார்களா பெரிய பொறுப்புகள் வரப்போகிறதா என்ன முன்னேறாத இதெல்லாம் தமிழ்நாட்டின் சாபகேடுன்னு சொல்லணும்.


Rajarajan
நவ 18, 2024 16:09

புரியுது. வரும் ஜனவரி முதல், மீதமுள்ள குடும்ப அட்டை தாரருக்கு, மாதம் ரூபாய் ஆயிரம் இலவசமா தரப்போறீங்க . அதுக்கு பணம் வேணும், அதானே ?? யார் கிட்ட கேக்கறீங்க அண்ணண் கிட்ட தானே ? சும்மா கேளுங்க. ஆனா தம்பி, இந்த தம்பிக்கு கொடுக்க, அண்ணண் கிட்ட பத்து பைசா இல்லையேன்னு நெனைக்கறப்ப தான் வருத்தமா இருக்கு.


Suppan
நவ 18, 2024 15:55

அதாவது விடியல் அரசுக்கு மென்மேலும் கைஅரிப்பு தாங்கவில்லை என்கிறீர்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை