உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலவரையற்ற வேலை நிறுத்தம்: மீனவர்கள் முடிவு

காலவரையற்ற வேலை நிறுத்தம்: மீனவர்கள் முடிவு

சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை கண்டித்து, மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் அவர்களது ஐந்து இயந்திர படகுகளும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த சம்பவம், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
பிப் 24, 2025 10:09

தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் இந்த பிரச்சினைகள் நடக்கின்றன . அய்யா பத்திரிக்கை காரர்களே ...உங்களுக்கு பழைய சரித்திரம் நிகழ்வுகள் தெரியு மா ????? பிரிட்டிஷ் காலத்தில் இந்திய சிலோன் ஒரே தலைவரின் ஆட்சியில் இருந்தது . சிலோன் சுதந்திரம் பெற்றபின்னர் அன்றைய ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுசுகோடி வசித்த மீனவர்கள் ஒரு நியாயம் தர்மத்தை கடைபிடுத்து இலங்கை நாட்டு எல்லை செல்லாமல் மீன் பிடித்துவந்தனர். பழைய மக்களுக்கு எதுவரை இந்திய எல்லை என நன்கு தெரியும். ஆனால் தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமாரி கேரளா விலிருந்து மீனவர்கள் காங்ற்றச்ட் செய்யப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுக்கு மீன் மட்டும்தான் தேவை. மற்றவைகள் எதுவம் தேவையில்லை. எனவே இரவில் திருட்டுத்தனமாக இலங்கை கடல் பகுதியில் சென்று வலை வீசிவிட்டு அதிகாலை இலங்கை கடல் மீன்களை சுருட்டிவருகின்றனர் . இதில் மாட்டினால் அனைத்தும் போய்விடும் என தெரிந்தும் இந்த காங்ற்றச்ட் மீனவர்கள் செய்தால் எவர் பொறுப்பு ஏற்கமுடியும் இலங்கையில் மீன் பிடிப்பவர்களுக்கு தமிழ் பேசுபவர்கள்தானே. அடுத்து. பாக் ஜலசந்தியில் பிடிக்கு மீன்களை ராமண்ணாடு, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் விற்பது இல்லையே. அனைத்து மீன்களையும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். என்ன நியாயம் . முதலில் ராமன்ட் மாவட்ட மக்கள் மட்டும் மீன்பிடித்தல் போதும் அந்த மீன்களை தமிழ் மக்களுக்கு சாப்பிட கொடுங்கள்


Ramesh Sargam
பிப் 23, 2025 22:12

இந்த மீனவர் பிரச்சினை காலம்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. ஏன் மத்திய அரசும், மாநில அரசும் இதற்கு ஒரு நிரந்தர முடிவு காண முடியாமல் இருக்கிறார்கள்?


புதிய வீடியோ