உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீர்பட்டது இந்தியா - கனடா உறவு; துாதர்கள் நியமித்து இரு நாடுகளும் அறிவிப்பு

சீர்பட்டது இந்தியா - கனடா உறவு; துாதர்கள் நியமித்து இரு நாடுகளும் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கனடாவுடன் உறவுகள் சீர்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு அந்த நாட்டுக்கான இந்திய துாதரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 1990ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியான தினேஷ் பட்நாயக் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2022ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் , இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால் இந்திய -கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் குமாரை மத்திய அரசு திரும்ப பெற்றது. ஜஸ்டின் ட்ரூடோ இருந்தவரை இந்திய கனடா உறவுகள் சீர்படவில்லை. அந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்ற நிலையில் இரு நாட்டு உறவுகள் சீரடைந்து வருகின்றன.இத்தகைய சூழ்நிலையில், 9 மாதங்களுக்குபின் கனடாவுக்கான புதிய இந்திய தூதராக தினேஷ்பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, இந்தியாவுக்கான கனடா துாதரும் நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோபர் கூட்டர் என்பவரை துாதராக நியமித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஆக 29, 2025 14:45

அப்புறம் என்ன? அங்கே போய் பெரிய மெடல் வாங்கி 140/கோடி பேருக்கு அர்ப்பணிக்க வேண்டியதுதான்.


RAMAKRISHNARAJU
ஆக 29, 2025 20:23

onuku enna Arasiyal theriyum?


Suresh
ஆக 28, 2025 22:39

நல்லது நடந்தால் சரி.


sankaranarayanan
ஆக 28, 2025 21:08

கனடா இந்தியா உறவு முன்பு கெட்டுப்போயிருந்தது இப்போது சரி ஆகிவிட்டது ஆனால் அமெரிக்க இந்திய உறவு மிகவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது எப்போது யாரால் சரி ஆகுமோ தெரியவில்லை ஆண்டவா


முக்கிய வீடியோ