உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியா சிமெண்ட்ஸ் நிகரலாபம் 300% ஐ தாண்டியது

இந்தியா சிமெண்ட்ஸ் நிகரலாபம் 300% ஐ தாண்டியது

சென்னை : 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 300 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிகர லாபம் 308.4 சதவீதம் அதிகரித்து ரூ.102.03 கோடிகளை லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.24.98 கோடியாக இருந்ததாகவும், தற்போது நடப்பு ஆண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் ரூ.68.10 கோடியை லாபமாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் பெற்ற மொத்த லாபம் ரூ.1061.19 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 20.2 சதவீதம் அதிகமாகும். 2011 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3509.27 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்