உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போர்க்கால நடவடிக்கை அமைச்சர்கள் தகவல்

போர்க்கால நடவடிக்கை அமைச்சர்கள் தகவல்

அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: மழைநீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் குடியிருந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:அக்டோபர், நவம்பரில் பொழிய வேண்டிய பருவமழை முன்னதாக ஆகஸ்ட், செப்டம்பரிலேயே மதுரையில் தொடங்கி விட்டது. பருவமழைக்கு முன்பாகவே மதுரை மாவட்டத்தில் கண்மாய்கள் பரவலாக நிரம்பியுள்ளன. மறுகால் பாயும் தண்ணீர் இறுதியாக பந்தல்குடி கால்வாய் வழியாக செல்லுார் கண்மாயில் இருந்து வைகையாற்றுக்கு செல்கிறது.கால்வாய் செல்லும் சில இடங்களில் அதன் கொள்ளளவை விட அதிகமாக மழைநீர் செல்வதால், கால்வாயை தாண்டி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை பணியாளர்களும் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை