உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோமேஷன் துறையில் மையம் துவக்க ஒப்பந்தம்

ஆட்டோமேஷன் துறையில் மையம் துவக்க ஒப்பந்தம்

கோவை: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் தொழில்நுட்பக்கல்லூரி, போஸ் ரெக்ஸ்ரோத் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கோவையில் கையெழுத்தானது. ஆட்டோமேஷன் துறையில் நான்கு கோடி மதிப்பில் மண்டல மையம் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் தொழில்நுட்பக்கல்லூரி, போஸ் ரெக்ஸ்ரோத் நிறுவனம் கையொப்பமிட்டன. போஸ்ரெக்ஸ்ரோத் நிறுவன துணைத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:படித்து வெளியேறும் இன்ஜினியரிங் துறை மாணவர்களிடையே தொழில்துறை குறித்த புரிதல் குறைவாக உள்ளது. இதுபோன்ற ஒப்பந்தங்கள் மூலம் கல்லூரி படிப்புக்கும் இன்டஸ்டரி வேலைவாய்ப்புக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி குறையும். மாணவர்கள் தொழிற்சாலைகளை நேரடியாக பார்வையிட ஏற்பாடு செய்யப்படுகிறது. படித்து வெளியேறும் திறமையுள்ள மாணவர்களுக்கு போஸ் ரெக்ஸ்ரோத் குழுமத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களில் தலைவர் மாணிக்கம் மற்றும் போஸ் ரெக்ஸ்ரோத் குழுமத்தின் துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். போஸ் ரெக்ஸ்ரோத் பொதுமேலா ளர் நடராஜ் சந்திரா, என்.ஐ.ஏ., கல்வி நிறுவன தாளாளர் சங்கர் வாணவராயர், செயலர் பேராசிரியர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி