உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலைஞர் டிவியில் இன்பநிதிக்கு பொறுப்பு: கருணாநிதி பிறந்த நாளில் வழங்கப்பட்டது

கலைஞர் டிவியில் இன்பநிதிக்கு பொறுப்பு: கருணாநிதி பிறந்த நாளில் வழங்கப்பட்டது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி, 21, கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி, கலைஞர் 'டிவி'யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப் படிப்பை இன்பநிதி முடித்துள்ளார். கடந்த 3ம் தேதி, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் 'டிவி' அலுவலகத்திற்கு, இன்பநிதியை அவரது தாய் கிருத்திகா அழைத்து வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9s84h8vk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி மகன் கார்த்திகேயன், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக தற்போது இருக்கிறார். அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில், மகன் இன்பநிதியை அமர வைத்து, அவருக்கு கிருத்திகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பணிகள் குறித்து, அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தினமும் இன்பநிதி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தினமும் காலை 11:00 மணிக்கு அலுவலகம் வரும் இன்பநிதி, மாலை 5:30 மணி வரை பணி புரிவதாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

angbu ganesh
ஜூன் 24, 2025 14:01

அது உங்க குடும்ப விஷயம் கொடுத்துக்கோ அடுத்து அவனை துணை துணை முதல்வர்னு அறிவித்தால் ...படித்தான் விழும் அய்யகோ தமிழக மக்களே இவனுங்க கொடும தாங்க முடியல


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூன் 21, 2025 17:35

இவனுங்க பெயர் மற்றும் வேலை பார்க்கும் துறை எல்லாமே நிதி என்ற பெயரில்தான் இருக்கும்.


chidhambaram
ஜூன் 21, 2025 13:53

கொத்தடிமைகள் கட்சி


Krishnamoorthy Perumal
ஜூன் 21, 2025 07:32

இன்பநிதி காதலிக்கு ஒரு பதவி கொடுங்க


D.Ambujavalli
ஜூன் 18, 2025 18:28

கலைஞர் தான் பெற்ற கடனுக்காக ‘அந்த’ வீட்டுப் பெண்ணை அரசியலில் நுழைத்துஎம். பி லெவலுக்கு உயர்த்தி விட்டார். அது கொடுக்கும் குடைச்சலே தாங்க முடியவில்லை இதில் அந்தக் குடும்பத்திலிருந்து இன்னொரு நபரை நுழைய விடுவார்களா?


sankar
ஜூன் 18, 2025 12:26

தம்பி அப்ரசண்டு - டிவிஎஸ் கடினமான உழைப்பில் உருவான, பல சாதனைகள் செய்துகொண்டு இருக்கும் நிறுவனம் - நம்ம கதை அப்படியா ?


Mani . V
ஜூன் 18, 2025 08:48

பால்குடி மாறாத பச்சைப் புள்ளைக்கு நாங்க ஒன்னும் தெரியாமலோ, புரியாமலோ பதவி கொடுக்கவில்லை. 2026 தேர்தலில் அந்தக் குழந்தையை களமிறக்கப் போகிறோம். அப்பொழுது சொத்துக் கணக்கு காட்ட வேண்டுமல்லவா? அதற்கு அந்தக் குழந்தையின் மாதச் சம்பளம் 5 கோடி ரூபாய் அப்படின்னா, ஆண்டு வருமானம் 60 கோடி. அந்த வருமானத்தை அது பிற தொழில்களில் முதலீடு செய்ததன் மூலமும், வட்டிக்கு விட்டு பெற்றதன் மூலமும் எட்டிய தொகை 213 கோடி ரூபாய். குடும்பச் சொத்து 579 கோடி. ஆக, மொத்தம் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் காட்ட இருக்கும் தொகை 852 கோடிகள் மட்டுமே. அம்புட்டுத்தான். அந்தக் குழந்தைக்குப் பணிவிடை செய்து "அந்த" நாற்காலியில் அமர வைக்கத்தான் வாழ்நாள் கொத்தடிமைகள் இருக்கிறார்களே.


Kannan Chandran
ஜூன் 18, 2025 08:19

சரியாக பள்ளிப்படிப்பை தாண்டாமல், கால்பந்து பயிற்சிக்காக வெளிநாடு செல்கிறேன் என்று ஊர் சுற்றியிருந்த இவர் எப்படி பட்டம் பெற்றார்..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 18, 2025 07:37

சூப்பர்


venugopal s
ஜூன் 18, 2025 06:53

கலைஞர் டிவி ஒரு தனியார் நிறுவனம். மேலும் ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் கைவசம் உள்ள நிறுவனம். டி வி எஸ் நிறுவனம் சுந்தரம் அய்யங்கார் குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக உள்ளது போல் கலைஞர் டிவி நிறுவனம் இருப்பதில் என்ன தவறு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை