உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: இ.பி.எஸ்.,

தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து ஓ.பி.எஸ்., நீக்கப்பட்டு விட்டார். அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை.

மாறாது

போலீஸ் அதிகாரியை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது. தி.மு.க., ஆட்சியில் போலீசார் சுதந்திரமாக செயல்பட முடிவில்லை. கொலை நடக்காத நாளே இல்லை. பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. முதல்வர் சிறப்பாக செல்பட்டு இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும். மாநிலத்தில் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.பாகம் பிரிக்கிற சண்டையினால் தான் கோவை மேயர் ராஜினாமா என கருதுகிறேன். அவர்கள் இடையே ஒற்றுமை இல்லை. எந்தெந்த துறைகளில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பது மட்டும் தான் ஆட்சியின் திட்டம். உள்ளாட்சி துறை படுபாதாளத்திற்கு போய்விட்டது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2024 09:13

உங்களால் தான் திமுக ஜெயித்து வருது அதனால உங்களுக்கு ஒன்னும் ஆவாது


தமிழ்வேள்
ஜூலை 08, 2024 21:18

சிலுவம்பாளைய சீமான் யாரையோ நினைத்து பயந்து போய் உள்ளது போல் தெரிகிறது..


Chandran,Ooty
ஜூலை 08, 2024 19:33

ஆனால் உங்களை பாதுகாக்கும் கட்சி என சொல்லுங்கள் உங்கள் மேல் போடப் பட்ட பல வழக்குகளை எநத வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக வைத்திருக்கிறதே உங்கள் பங்காளி திமுக அரசுதானே அதாவது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே..


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 18:40

பார்த்து.... பங்காளி கட்சி கோபித்து கொள்ள போகிறது.... எப்போதும் போல அமைதியாக இருங்கள்.... இல்லையென்றால் கொடநாடு பூதம் வெளியே வந்து விட போகிறது.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 08, 2024 17:38

காந்திஜி போன்ற அரசியல் தலிவர்களா கொல்லப்படுகிறார்கள்? கட்ட பஞ்சாயத்து, ரவுடி போன்ற கட்சி தலைவர்கள் தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்


Kadaparai Mani
ஜூலை 08, 2024 16:33

அதிமுக ஆட்சி வரும் 2026 ஆம் ஆண்டு .அன்று எதிர்க்கட்சி தலைவர்களான திரு விஜய் மற்றும் சீமான் அவர்களுக்கு நீங்கள் முதல்வர் என்ற முறை இல் நல்ல பாதுகாப்பு கொடுங்கள் .


என்றும் இந்தியன்
ஜூலை 08, 2024 16:32

தவறு. இப்படி இருக்க வேண்டும் அறிக்கை. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பில்லை. எதிர் கட்சி அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கு கிருத்துவர்களுக்கு இந்து எதிர்ப்பாளர்களுக்கு மிக மிக நல்ல பாதுகாப்பு உண்டு திருட்டு திராவிட மடியில் அரசு ஆட்சியில்


Ramesh Sargam
ஜூலை 08, 2024 16:17

அப்படி என்றால் பொதுமக்கள் பாதுகாப்பை பற்றி கொஞ்சம் யோசிக்கவும். திமுக ஆட்சி செய்கிறதா அல்லது அராஜகம் செய்கிறதா? ☹️☹️☹️


Narayanan
ஜூலை 08, 2024 16:02

தமிழகம் அமைதியாக இல்லை . ஆட்சியை கலைப்பதைத் தவிர வேறு வழி இல்லை . ஆனால் மத்திய அரசு செய்யாது . அவர்களின் கடந்த பத்து ஆண்டுகளில் செய்யவில்லை . மக்களின் அன்றாட வாழ்க்கை சுமையும் ஏறிக்கொண்டே போகிறது . உயர்ந்து மின் கட்டணம் ஒன்றே சாக்ஷி .


MADHAVAN
ஜூலை 08, 2024 15:41

தூத்துகுடில கலவரம் நடக்கும்போது துப்பாக்கிசூடு நடக்கும்போது எட்டப்பன் படத்தை டிவில் பார்த்த உங்களுக்கு இது எல்லாம் தேவையா ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை