உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இணையதள சேவை பாதிப்பு; கட்டுமான துறையினர் புகார்

 இணையதள சேவை பாதிப்பு; கட்டுமான துறையினர் புகார்

சென்னை: சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கட்டுமான திட்ட அனுமதி வழங்க, ஒற்றை சாளர முறை தொடங்கப்பட்டது. இதில், கட்டட அனுமதி தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது. இதே போன்று, மனை வரன்முறைக்கும் இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளங்களில், நாள்தோறும் புதிதாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், சமீப காலமாக அடிக்கடி பழுது ஏற்படுவதாக கட்டுமான துறையினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை