உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் டிரைவர் மடியில் அமர்ந்து போதை நபர் அலப்பறை

பஸ் டிரைவர் மடியில் அமர்ந்து போதை நபர் அலப்பறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில், அரசு பஸ்சை வழிமறித்து, டிரைவர் மடியில் அமர்ந்து அடாவடி செய்த போதை நபரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ், 21ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை, கோவையைச் சேர்ந்த ரகுராம், 39, என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனி அருகே பஸ் வந்த போது, குறுக்கு ரோட்டில் இருந்து, இருவர் டூ - வீலரில் அதிவேகமாக வந்து திரும்பினர். பஸ் டிரைவர் 'ஹாரன்' அடித்து, எச்சரிக்கை செய்தார்.போதையில் டூ - வீலரில் வந்த இருவரும், பஸ்சை பின்தொடர்ந்தனர். காந்தி நகர் சிக்னல் அருகே பஸ்சை வழிமறித்து, பஸ்சில் ஏறிய ஒரு போதை ஆசாமி, டிரைவரின் மடியில் சென்று அமர்ந்து கொண்டு, 'உனக்கு பஸ் ஓட்டத் தெரியலே. நான் சொல்லிக் கொடுக்கிறேன்' என அலப்பறை செய்து பணி செய்ய விடாமல் தடுத்து, தகராறு செய்தார்.அனுப்பர்பாளையம் போலீசார், இருவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். விசாரணையில், டிரைவரிடம் அட்டகாசம் செய்த சோளிபாளையத்தை சேர்ந்த பிரதீப், 48, நண்பருடன் டூ - வீலரில் வந்த போது, அரசு பஸ் மோதுவது போல வந்ததாகவும், இதுதொடர்பாக டிரைவரிடம் முறையிட பஸ்சில் ஏறியதாகவும் கூறினார்.பிரதீப்பை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ponssasi
அக் 24, 2024 11:09

இதைவிட மோசமான அக்கப்போரெல்லாம் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கிறது, ஒரு சில மட்டுமே செய்திகளில் வருகிறது.


KRISHNAN R
அக் 24, 2024 10:55

யாரும் குறை சொல்ல முடியாத...........


raja
அக் 24, 2024 09:31

டாஸ்மாக் மாடல் போதை ஆட்சி கொடுக்கும் திருட்டு திராவிட திமுக...


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 08:55

போலீஸ் கூப்பிட்டு சுளுக்கெடுத்ததும், மன்னிப்பு வீடியோ போடுவானுங்க. அட போங்க சார், இதுவும் வாடிக்கை ஆயிடுச்சு.


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 08:54

திருப்பூரில் எவனோ தண்ணி அடிச்சுட்டு அலப்பறை பண்ணினதுக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்?? இதை திராவிட மாடல் என்பதை விட "இந்துக்கள் மாடல் " என்று ஏன் சொல்லி நாம கோபப்படுவதில்லை? ஏன் நாம வருத்தப்படுவதில்லை??


raja
அக் 24, 2024 09:36

சே சே உடன் பிறப்பே... இந்துக்கள் மாடல் வீரம் இல்லாதது.... இருந்திருந்தால் எவ்வளவு கேவலமாக இந்து மதத்தையே ஒழிப்போம் என்றவனுக்கு எம் எல் ஏ பதவி பின் இப்போ இரண்டாம் நிலை பதவி கொடுத்தும்... ஆனால் திராவிட மாடல் புதிதாக வீரன் என்ற சரக்கை ஊத்தி கொடுப்பதால் தான் இப்படி நடகிறது என்று உன் பேறரிவுக்கு புலப்பட வில்லையா


Abdullah Sulthan
அக் 24, 2024 16:29

குட் sir


Kumar Kumzi
அக் 24, 2024 08:40

இதான்டா விடியாத விடியலின் டாஸ்மாக் மாடல் ஆட்சி ஹீஹீஹீ


S.kausalya
அக் 24, 2024 07:47

கேட்கும் எல்லோருக்கும் சொல்வோம். இது தாண்டா திராவிட மாடல்


நிக்கோல்தாம்சன்
அக் 24, 2024 07:29

டாஸ்மாக் டீ கடையை கொண்டு வந்து பிரதீப் போன்றோருக்கு உற்சாக பானத்தை அள்ளிக்கொடுக்கும் வள்ளல் முன்னாள் முதல்வர் பெயர் கல்வெட்டில் பொறிக்க வேண்டுகிறேன்


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 08:51

மிகவும் சரி. முதல் முதலாக தமிழ் நாட்டில் டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கி, அதன் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் தான். எந்த கல்வெட்டில் என்றும் சொல்லுங்க,


நிக்கோல்தாம்சன்
அக் 24, 2024 18:50

மெரினா கடற்கரையில் ஐயோ கொல்லுறாங்க என்று அந்த சமாதியில் பொரித்து வைக்கலாம்


Sriraman Ts
அக் 24, 2024 07:12

குடிபோதையில் ஒரு நபர் பொது இடத்தில் செய்யும் அட்டகாசம். சீரழிவுக்கு எடுத்துக்காட்டு


Kasimani Baskaran
அக் 24, 2024 07:04

டாஸ்மாக்குக்கும் இதற்கும் துளியளவு கூட தொடர்பு கிடையாது என்பதை நம்பாதவர்கள் இரத்தம் கக்கி மரணமடைவார்கள்.


முக்கிய வீடியோ