உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது; திருமா பேட்டி

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது; திருமா பேட்டி

சென்னை: 'வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை ஏமாற்றம் அளிக்கிறது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. அங்கே உள்ள வழக்கமான போலீஸ் குற்றப்பிரிவை சார்ந்தவர்கள் விசாரிக்க கூடாது. சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என்று கோரிக்கையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை நியமிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் மீதே, இவர்கள் தான் அந்த குற்றத்தை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

சமூக நீதி

சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என்று வி.சி.க., வேண்டுகோள் விடுக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். தி.மு.க., அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க இந்த அரசு துணையாக நிற்கும் என்று நம்புகிறோம். போலீசாரின் இந்த போக்கை ஏற்க முடியாது. சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

விஜய் பேசவில்லை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். சீமானின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஏன் இவ்வாறு பேசுகிறார்? இப்படி செயல்படுகிறார் என்று தெரியவில்லை. இது அவருக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது அல்ல. வேங்கைவயல் குறித்து விஜய் எந்த கருத்தும் சொன்னதாக தெரியவில்லை. அவர் வேங்கை வயல் மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக கூறியது ஆறுதல் தந்தது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக, ஜனவரி 27ம் தேதி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Kanns
ஜன 26, 2025 07:13

Was he in Wanton Coma Due to Ruling DMK Alliance. Now Some Fake Accused Will be Arrested-Prosecuted by Ruler/Groups Police


அப்பாவ
ஜன 26, 2025 06:32

விழுப்புரம், சிதம்பரம் வேணுமா வாணாமா?


Ravi Chandran
ஜன 25, 2025 23:45

வேங்கை வயல் பிரச்சனை மிகவும் ஒரு சென்சிடிவான ஒரு விசயம். இதில் தமிழக சிபிசிஐடி போலீசார் தங்கள் மீதான பல்வேறு விமர்சனங்கள் ஏச்சு, பேச்சுக்கள் இவைகளை கடந்து நீண்ட விசாரணைகளுக்கு பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஏமாற்றம் ஏதும் இருந்தால் அதை நீதி மன்றத்தில்தான் குற்றம் சாட்டப் பட்டவர்கள் நிரூபிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இவ் விசயத்தில் தமிழக காவல் துறையை குறை சொல்வதில் நியாயம் இல்லை.


sridhar
ஜன 25, 2025 22:47

தலித் மக்களை எந்த வழக்கிலும் பிடிக்கக்கூடாதா , இது என்ன பேதமை .


பேசும் தமிழன்
ஜன 25, 2025 22:46

ஏம்பா.... விசாரணை முழு திருப்தி அளிக்கிறது என்று மாற்றி பேச மாட்டீர்களே.... உங்கள் நடவடிக்கை அப்படி தான் இருக்கிறது.


பேசும் தமிழன்
ஜன 25, 2025 22:31

இவருக்கு வேங்கை வயல் ஊர் பெயரே இப்போது தான் நியாபகம் வருது போல் தெரிகிறது. ஒன்றும் அவசரமில்லை. அறிவாலயத்தில் கேட்டு விட்டு பதில் சொன்னால் போதும் !!!


தத்வமசி
ஜன 25, 2025 22:21

உனக்கு கடைசிவரை இரண்டு சீட்டும், பிளாஸ்டிக் சேரும் தான்.


theruvasagan
ஜன 25, 2025 22:20

கூட்டணிக் கட்சி தலைவருக்கு முதல்வர் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் போனதால்தானே சிபிஐ விசாரணை கேட்கிறார்.


N.Purushothaman
ஜன 25, 2025 21:50

சரக்கும் மிடுக்கும் திருட்டு திராவிடனுங்க முன்னாடி படுத்துடுச்சி போல ....


முருகன்
ஜன 25, 2025 19:04

அறிவு இல்லாத மனிதர்கள் அனைத்து இடத்திலும் உள்ளனர் உண்மையாக இருப்பின் ஏற்றுக் கொள்ள வேண்டும்


vivek
ஜன 26, 2025 12:43

ஆமாம் உன் கருத்து பார்த்தவுடன் எங்களுக்கு புரிஞ்சி போச்சி முருகன்


புதிய வீடியோ