உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருநாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; ஒரு வார காலமாக ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தை மேற்கொண்டேன். மன நிறைவோடு திரும்பியுள்ளேன். இந்தப் பயணத்தை பொறுத்தவரையில் மாபெரும் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்த்து, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். உயர்கல்வி, சிறு தொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே உள்ள 17 நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு போகாமல், நம்ம மாநிலத்திலேயே விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளன. ஒரு துடிப்பான அமைச்சராக டிஆர்பி ராஜா இந்தப் பயணத்தின் மூலம் நிரூபித்துள்ளார். இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கிலும் நாம் கடந்து வந்த பாதையையும், அடைய வேண்டிய இலக்குகளையும் விளக்கமாக பேசியுள்ளேன். அயலக தமிழர்கள் மற்றும் லண்டன் பல்கலை உள்ளிட்ட இடங்களில் பேசியது, காரல் மார்க்ஸ் நினைவிடம், அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பெருமையுடன் திரும்பியுள்ளேன். எனக்கு அனைத்து விதங்களிலும் மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிலரால் இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதுக்கு இந்த வெளிநாட்டு பயணம், இங்கு இருக்கும் நிறுவனங்களை சந்தித்து பேசினால் போதாதா? என்று எல்லாம் அறிவுபூர்வமாக கேட்பதாக நினைத்து, புலம்பி இருக்கிறார்கள். அவங்களுக்கு எல்லாம் நான் சொல்வது என்ன என்று கேட்டுக் கொண்டால், ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் நிறைய ஜெர்மன் நிறுவனங்கள் வந்திருந்தன. அப்போது, தமிழகத்தைப் பற்றி எடுத்துச் சொன்ன போது, தமிழகத்தில் இவ்வளவு வசதி உள்ளது இப்போது தான் தெரிகிறது என்று கூறினார்கள். இனி தமிழகத்தை நோக்கி நிறைய நிறுவனங்கள் வருவார்கள் என்று சொன்னார்கள். வெளிநாட்டு தலைவர்களுடன் வலுவான உறவை உருவாக்கவும், இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நானே வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஏற்கனவே தமிழகத்தில் நிறுவனங்கள் இருந்தாலும் , அவங்களின் புதிய திட்டங்களை இங்கே தான் தொடங்க வேண்டும் என்று உறுதியளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள மனிதவளம், உள்கட்டமைப்பு, வெளிப்படையான அரசு நிர்வாகம், சலுகைகள் பற்றி முதல்வராக இருக்கும் நானே அவர்களிடம் எடுத்துக் கூறினேன். 11ம் தேதி ஒசூருக்கு செல்கிறேன். அங்கு ரூ.2,000 கோடி டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை, பணியாளர்கள் தங்கும் இடத்தை திறந்து வைக்க உள்ளேன். அதன்பிறகு, ரூ.1,100 கோடி மதிப்பிலான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப் போகிறேன். ஏற்கனவே, தூத்துக்குடியில் நடத்தியதைப் போல ஒசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறோம். அங்கும் பல ஆயிரம் கோடி முதலீடுகள் வர இருக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Sivaram
செப் 08, 2025 22:40

அவன் அவன் குடியும் சினிமா நிகழ்ச்சிகளை பார்த்தும் மகிழ்ச்சியா இருக்கான். எங்களுக்கு இது போதும் முதலீடு வந்தால் என்ன வராவிட்டால் என்ன. தலைவர் நாளை எங்களிடம் பேசுவார்


M Ramachandran
செப் 08, 2025 20:52

அரசு செலவில் குடும்ப இன்ப சுற்றுலா சென்றீர்களே. இனிமையாக உல்லாசமாக பொழுதை கழித்தீர்களா


Kasimani Baskaran
செப் 08, 2025 18:36

IAMPL என்ற ரோல்ஸ் ராய்ஸ் + ஹெச் ஏ எல் 50%/50% கூட்டு நிறுவனம் - அப்படியிருக்கையில் மத்திய அரசு துறை நிறுவனத்தின் அனுமதியில்லாமல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எப்படி இந்திய நிறுவனத்தில் உபரியாக முதலீடு செய்ய முடியும்?


Balaa
செப் 08, 2025 17:52

அது என்ன 15516 கோடி?. அவ்வளவு துல்லியமான கணக்கு?. இதன் சிம்பிள் ரகசியம் - பகுத்தறிவு பகலவன்களின் அசைக்க முடியாத ஜோதிட நம்பிக்கை. நியூமராலஜி - இந்த தொகையை கூட்டினால் வரும் எண் 9. லக்கி நம்பர்.


panneer selvam
செப் 08, 2025 17:37

Stalin , you have made a tall claim that 15 K crore investment from Germany and UK , out of which 7.5 K crores from Hinduja owned Ashok Leyland . This factory is just 18 KM from your office in St.Geroge Fort . Secretariat . Already they have got approval on Central Government on Atmanirbhar project. So let us stop these dramas


மோகன்
செப் 08, 2025 16:40

ஓஹோ. அப்படியா..


Sridhar
செப் 08, 2025 15:34

என்னது, இந்த பயணத்தில்தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதா? 15 ஆயிரம் கோடியே அதிகம்னா அப்போ போன தடவையெல்லாம் ஈர்க்கப்பட்டதாக சொன்ன 10 லச்சம் கோடி பொய்யா கோபால்? 2021 லிருந்து இப்போவரை தமிழகத்தில் திறக்கப்பட்ட தொழிற்சாலைகள் மொத்தம் 445 தான். UP யில் இதே காலகட்டத்தில் 3000 துக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. அது முதலீடு, ஈர்ப்பு. வெளிநாட்டுக்கு போயி என்னதான்யா பண்றீங்க??


P Karthikeyan
செப் 08, 2025 14:41

சமீபத்தில் தூத்துக்குடியில் புதிதாக வந்த கார் தொழிற்சாலை கனிமொழியின் காசில் தொடங்கப்பட்டதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்


Barakat Ali
செப் 08, 2025 14:02

நீங்க சொல்றதை நம்பாதவன் ரத்தம் கக்கி போய்ச்சேருவாங்க ன்னு .....


Rajan A
செப் 08, 2025 14:00

வரும் ஆனா வராது. தேர்தல் வாக்குறுதிகள் மாதிரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை