உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை பல வகையிலும் மோசடி செய்வது தொடர்ந்து நடக்கிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wq5je1dn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்த குமார், விபுல், ஜிதேந்திரா, விபின் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி ரொக்கம், இரண்டு கார்கள், இரண்டு பைக்குகள்,12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mr Krish Tamilnadu
ஏப் 12, 2025 14:16

விளையாட்டை ஆரோக்கிய மேம்பாடாக பார்க்காமல், என்றைக்கு பந்தயமாக பார்க்க ஆரம்பித்தோமோ, அன்றே ஆரம்பித்தது. ரசிகன், குரு என உயர்த்தி, தனது போராட்டம், உழைப்பை வீரர்கள் குறுகிய கால வாழ்க்கை வருமானத்தை, எதையும் யோசிக்காமல் பெற முயல்கிறார்கள்.


naranam
ஏப் 12, 2025 13:43

இந்த ஐபிஎல் லே ஒரு சூதாட்டம் தான். பண முதலைகளின் சூதாட்ட வெறி தான் இங்கு விளையாட்டு என்ற பெயரில் நடக்கிறது. முதலில் இதைத் தடை செய்ய வேண்டும்.


அப்பாவி
ஏப் 12, 2025 13:08

என்னதான் சூதாட்டம் ஆடினாலும் எட்டு விக்கெட் வித்தியாசத்திலா தோப்பாங்க? கேவலமா இருக்கு.


அப்பாவி
ஏப் 12, 2025 13:07

நியாயமா ஆடி ஜி.எஸ்.டி கட்டுங்க.. கண்டுக்க மாட்டாங்க.


சிவா. தொதநாடு.
ஏப் 12, 2025 11:18

உடனடியாக 500 ரூபாய் நோட்டை மதிப்பிழப்பு செய்ய வேண்டும்


Narasimhan
ஏப் 12, 2025 11:09

IPL தொடங்கியதே சூதாட்டத்திற்குதான். அணி உரிமையாளர்கள் வீரர்கள் சூதாட்டத்தில் நிறைய காசு பார்க்கின்றனர்.


முக்கிய வீடியோ