சென்னை:பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரியும், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனருமான மகேஷ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் சக்திவேல், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.சென்னை காவல் துறையில், வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராக உள்ள டி.ஐ.ஜி., மகேஷ்குமார் மீது, அப்பிரிவில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர், தன் கணவருடன் சென்று, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார். உத்தரவு
அந்த புகாரில், இணை கமிஷனர் மகேஷ்குமார், பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்தார் என்றும், தனக்கும், குடும்பத்திற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினார் என்றும் கூறியிருந்தார். அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால், குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிஇருந்தார்.பணியிடத்தில் மகேஷ்குமார் நடந்து கொண்ட வீடியோ காட்சிகள், அவர் அனுப்பிய குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்களையும், டி.ஜி.பி.,யிடம் பெண் போலீஸ் அளித்துள்ளார். அதன்பின், மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது, விடுப்பில் இருக்கிறார்.இதற்கிடையே, பெண் போலீசின் புகாரை விசாரிக்க, டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டிக்கு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். நடவடிக்கை
புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மை குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை, டி.ஜி.பி.,யிடம் விசாகா கமிட்டி சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், இணை கமிஷனர் மகேஷ்குமாரை 'சஸ்பெண்ட்' செய்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை துறை ரீதியானது என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மகேஷ்குமார், தெற்கு மண்டலத்தில் பணியாற்றிய போது, மற்றொரு பெண் போலீசுக்கும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர். மகேஷ்குமாரின் பாலியல் தொல்லைகளுக்கு உதவியாக செயல்பட்ட, மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேலை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார்.சிக்கியவர்கள் போலீஸ் பூத்தில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார் இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி வழக்கில், திருவல்லிக்கேணி எஸ்.ஐ., ராஜா சிங், சைதாப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டு கைது செய்யப்பட்டுள்ளனர் எழும்பூரில் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில், அருண்பாண்டியன் என்ற கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார் அசோக் நகர் காவல் நிலைய போலீஸ்காரர் ஜேம்ஸ், போதைப் பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் அயனாவரம் சட்டம் - ஒழுங்கு காவலர் பரணி, போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.