உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தா பாருங்க நடவடிக்கை எடுத்தாச்சு; யூடியூபர் தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் க்ளோஸ்

இந்தா பாருங்க நடவடிக்கை எடுத்தாச்சு; யூடியூபர் தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் க்ளோஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரசவத்தின் போது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட இர்பானை அனுமதித்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. உணவு ரிவ்யூ செய்யும் யூடியூபரான இர்பான் தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, குழந்தை பிறக்கும் போதும் கூட, அவர் செய்த சேட்டையை வீடியோவாக எடுத்து வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவேன் என டாக்டர்களிடம் அடம் பிடித்துள்ளார். இது மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என தெரிந்தும், மருத்துவமனையின் பிரபலத்திற்காக, டாக்டர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தொப்புள் கொடியை வெட்டுவதை வீடியோ எடுத்த இர்பான், தன் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையான நிலையில், இர்பானை மன்னிக்க முடியாது என்றும், அவர் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரசவத்தின் போது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட இர்பானை அனுமதித்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. உள்நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், தடை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியை வெட்டிய இர்பான் மீதான நடவடிக்கை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ganapathy Subramanian
அக் 25, 2024 16:17

சாண்டில்யன் அவர்களின் புலம்பல் ரொம்ப ஓவராக உள்ளதே? எதற்கு எடுத்தாலும் அவாளை இழுக்கும் சொரியாரின் சீடர்களில் ஒருவரோ?


angbu ganesh
அக் 24, 2024 16:16

மாசு மாசு அடைந்துவிட்டார் ஒருவேளை இர்பான் ன்ற பேர்தானோ


ponssasi
அக் 24, 2024 15:00

இதுக்கு பருதிமூட்டை குடோனிலே இருந்திருக்கலாம் மா சு அமைதியாக இருந்திருக்கலாம்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 24, 2024 13:10

அப்பப்பா எவ்ளோ பெரிய தண்டனை. கோர்ட் கூட சொல்லாமல் எவ்வளவு பெரிய தண்டனை. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகள் டாக்டர்கள் நடு நடுங்கி போய்விட்டனர். யூடுபர் இர்ஃபான் இனி வாழ் நாளில் எந்த யூ டுபும் பதிவிட மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டார். தமிழக அரசு கொடுத்த தண்டனை திராவிட மாடல் தண்டனை இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஆகி விட்டது. கனடா நாடு கூட இந்த தண்டனை ஏற்றுக் கொள்ள பரிசீலனை செய்கிறது. பாருங்களேன் எம்மாம் பெரிய தண்டனை. இனி யாராவது இது போல செய்வாங்கோ...... போங்க சார் எத்தனை தடவை தான் சிரிக்கிறது. வயிறு வலிக்கும் லோ....


Mani . V
அக் 24, 2024 05:45

யம்மா, எவ்வளவு பெரிய தண்டனை. போங்கய்யா நீங்களும், உங்கள் நடவடிக்கையும்.


Bala
அக் 24, 2024 00:12

மராத்தன் மா சு அவர்களே, நேற்று விட்ட உதார் என்ன ஆச்சு? காற்றோடு போயாச்சா... ஓட்டு வங்கி சிறுபான்மையினராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து தப்பித்துக்கொள்ளலாம். என்னடா ஞாயம் இது. வெட்க கேடு.


Jay
அக் 23, 2024 21:42

ரெயின்போ ஹாஸ்பிடல் ஓனரும் சிறுபான்மையினராக இருந்திருந்தால் இந்த தண்டனையும் கிடைத்திருக்காது. இர்பான் மன்னிப்பு கேட்டாலும் தப்பிக்க முடியாது என்று கூறினாரே மருத்துவர் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம். வெறும் ஹாஸ்பிடலுக்கு மட்டும் தண்டனையா? யூ டுபே சேனல் நடத்துபவர்கள் பொதுவாக கன்டென்ட் தேடுவார்கள், இந்தத் தேடுதலில் யார் பலியானாலும் கவலைப்பட மாட்டார்கள். இங்கு பலியானது அந்த ஹாஸ்பிடல் தான்


தனி
அக் 23, 2024 21:31

இவன் உதயதிதியின் தொப்புல்கொடி உறவு அதனால் எந்த தண்டனையும் கிடையாது, இது கண்துடைப்பு


Murugesan
அக் 23, 2024 21:18

திமுக அயோக்கியர்கள் பணம் பதவிக்காக என்ன செய்வார்கள் என்று ஈ வே ராமசாமி கன்னட பெரியவர் அவருடைய புத்தகம் 21 பக்கத்துல எழுதி உள்ளார் , கடைந்தெடுத்த திருடனுங்க


Duruvesan
அக் 23, 2024 21:06

அரசு ஊழியர் ஹிந்து துனூறு பூசினு போனா கூட இனிமே ஜெயிலாம்


முக்கிய வீடியோ