உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; ஆதாரங்களை வெளியிட்டார் அண்ணாமலை

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு; ஆதாரங்களை வெளியிட்டார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 100 நாள் வேலை திட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பாரா? என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஆதாரங்களை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:தமிழக முதல்வர் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ரூ.39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சி.பி.ஐ., விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே?இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி தி.மு.க., வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சிதமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு, என்று அதன் விபரங்களையும் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது முதற்கட்ட பட்டியல் தான் என்றும், அடுத்த கட்ட பட்டியலை தயார் செய்யும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Murthy
மார் 31, 2025 19:29

முறைகேடு என்று சொல்கிறீர்கள்.....ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு விசாரணை கூட நடத்தாமல் இருக்குறீர்கள் .......இதுதான் கள்ள கூட்டணி ...... நீங்களும் பங்கு வாங்கிக்கொள்கிறீர்களா ??


Mecca Shivan
மார் 31, 2025 10:17

இந்த அண்ணாமலை பத்திரிக்கை நிருபரா அல்லது கட்சி தலைவரா ..அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியின் மாநில தலைவரா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. ஒருபுறம் இவர் ஆதாரங்களை வெளியிடுகிறார் அல்லது தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று அடிக்கடி சொல்கிறார். ஆனால் மத்தியில் இருக்கும் அரசோ இவரின் இந்த கூச்சலுக்கு தனக்கும் சம்பந்தமேயில்லை என்பது போல அமைதியாக உள்ளது. நீதித்துறை தானாக முன் வந்து எந்த வழக்கையும் எடுப்பதுமில்லை. பிஜேபி கட்சியில் வக்கீல்கள் இல்லையா. அவர்களாவது வழக்கு தொடரலாம் .. அதிமுக திமுகவின் பங்காளி என்று அனைவருக்கும் தெரியும் ..சைமன் சிறந்த பேரம் பேசுபவர் என்றும் தெரியும்.. அதனால் அவர்கள் வழக்கு போடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது


ஆரூர் ரங்
மார் 31, 2025 12:32

வழக்குப் போட்டு என்ன பயன்? பொன்முடி ,செந்தில் பாலாஜி ஊழல் வழக்குகளின் நிலை என்ன? என்னாச்சு ?


pmsamy
மார் 31, 2025 09:11

ஊழல் நடந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே ஏண் அண்ணாமலை இங்க வந்து புலம்புறீங்க


Barakat Ali
மார் 30, 2025 23:38

சூரிய உதயம், சூரிய மறைவு எப்படி அன்றாடம் இயல்பானதோ அப்படித்தான் திமுகவின் ஊழல், முறைகேடுகளும் .....


s_raju
மார் 30, 2025 23:25

படிக்க தெரியலையா அல்லது படிக்க முடியலையா . கண் டாக்டரை அணுகவும்.


D Natarajan
மார் 30, 2025 20:56

என்ன பயன் . இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை. பத்து ருபாய் இன்னும் தண்டிக்க படவில்லை. கேடுகெட்ட அரசாங்கம், கேடுகெட்ட நீதி துறை.


வெங்காயம்
மார் 30, 2025 20:51

திராவிடம் என்ற விஷத்தை மிடரினில் அடக்கும் அன்னாமலையார். வாழ்க


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 20:27

இந்த லட்சணத்தில் இந்த கட்சியினர் , ஊடகத்தை கையில் வைத்திருப்பதால் என்னவெல்லாம் சொல்லி கொண்டு அலைகின்றனர் , ஒருவேளை அவர்களின் பிறப்பை போலவே அவர்களின் நடத்தையுமா ?


SUBBU,MADURAI
மார் 30, 2025 23:17

உங்கள் பெயரை பார்க்கும் போது நீங்கள் கிறிஸ்தவர் போல் தெரிகிறது. ஆனால் நீங்கள் போடும் ஒவ்வொரு நியாயமான கருத்தையும் நான் ரசித்து பார்க்கிறேன்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 01, 2025 21:34

நன்றி சுப்பு சார் , பிறப்பால் , வளர்பால் எல்லா இடத்திலேயும் கிருஸ்துவச்சி .ஆனால் அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு இன்று இயற்கை விவசாயி என்ற போர்வையும் இருக்கு , ஆனால் நாடு முக்கியம் அய்யா அதன் பின்னர் தான் மதம் என்பது எனது கோட்பாடு


பல்லவி
மார் 30, 2025 20:26

அடிச்சத எல்லாம் வெளி நாட்டில் பதுக்கி விட்டு இங்க வந்து வீர வசனம் பேசிட்டு இருக்கத்தான் செய்வாங்க போல


Prabhakar Krishnamurthy
மார் 30, 2025 20:11

திமுக வில் ஊழல் இல்லாத துறை எது ? தேனை எடுப்பவன் நக்குவான் ஆனால் இவர்கள் குடிப்பது எவ்வளவு சதவிகிதம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை