உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழுதைகளைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா: கேட்கிறார் கமல்!

கழுதைகளைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா: கேட்கிறார் கமல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்'' என, தெரு நாய் பிரச்னைக்கான தீர்வு குறித்து கமல் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களை ராஜ்யசபா எம்பி கமல் சந்தித்தார். அதன் விபரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gsb8llec&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிருபர்: முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து பாஜவினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்?கமல் பதில்: ஒருத்தர் நல்லது செய்யும் போது எந்த கட்சி என்று நான் பார்ப்பது இல்லை. நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால், அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிருபர்: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?கமல் பதில்: அது பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறேன். நிருபர்: பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் பிரதமரின் தாயை அவமதித்துள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?கமல் பதில்: யாரையும் அவமானம் படுத்தும் வகையில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஓட்டு காணாமல் போனது, பெயர் காணாமல் போனது எல்லாம் நான் ரொம்ப நாளாக சொல்லி கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெயரே காணாமல் போய் இருக்கிறது. போய் சொல்லி சரி செய்து கொள்வது எல்லாம் சின்ன விஷயம் தான். நிருபர்: தமிழகத்தில் தெருநாய் பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு என்ன தீர்வு?கமல் பதில்: தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். கழுதை எங்கையாவது காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? கழுதைகள் காணாமல் போய்விட்டதா? நமக்காக எவ்வளவு பொதி சுமந்து இருக்கிறது. கழுதையை இப்பொழுது பார்ப்பதே இல்லையே. கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா? எல்லா உயிரினங்களையும் முடிந்த அளவுக்கு காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும். அது தான் என்னுடைய கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Natarajan Ramanathan
செப் 03, 2025 23:42

அசைவம் சாப்பிடும் எந்த நாயும் ஜீவகாருண்யம் பற்றி எல்லாம் பேசவே தகுதி இல்லாத தற்குறிகள்.


தாமரை மலர்கிறது
செப் 03, 2025 20:58

அனைத்து தெருநாயை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் கொசுவை ஒழித்துவிட்டு வாருங்கள்.


Gurumurthy Kalyanaraman
செப் 03, 2025 20:48

Sir, நீங்க கூட காணாம போயிட்டீங்க. நாங்க அதற்கெல்லாம் வருத்தப்படுவோமா? ஏதோ ஆந்திர பக்கமோ இல்லே கர்நாடக பக்கமோ போயிருப்பார்னு விட்டு விட வேண்டியதுதான்.


vbs manian
செப் 03, 2025 20:40

மனிதர்களை விட நாய்க்கு பரிதாபப்படுகிறார். கழுதை பால் சாப்பிடுபவ ரோ .


T.Senthilsigamani
செப் 03, 2025 20:07

நாய்கள் முதலில் தான் கேட்ட ஊன் சோறு பிரியாணி எஜமான் போடவில்லை என்றால் எஜமானை பார்த்து குரைக்கும் ஓலமிடும் ஊளையிடும்.அப்போது காலால் பிராண்டி டிவி பெட்டியை எல்லாம் போட்டு உடைக்கும் .பின்பு ஓடி ஒளிந்து விடும் எஜமான் டார்ச் லைட் அடித்து அதனை மீண்டும் கொத்தடிமையாக நடத்திட எலும்பு துண்டுகளை போட்டு விடுவார் .அவ்வளவு தான் அந்த எஜமானின் விசுவாச எச்சில் நாயாக மாறிவிடும் .அதற்கு பின்பு அது குரைக்கும் அளவை கூட்டிக்கொண்டே போகும்.யாருக்கும் அது புரியாது.அதன் வாழ்வு பகுத்தறிவுக்கும் ,நாத்திகத்துக்கும் வித்தியாசம் தெரியாத மனித பதர்கள் போன்று ஒரு நாள் அனாதையாக சாகும் .அவ்வளவு தான் நாய்கன் வாழ்க்கை சாரி நாய்கள் வாழ்க்கை


anonymous
செப் 03, 2025 18:25

இந்த நாயை காப்பாற்றக்கூடாது


spr
செப் 03, 2025 18:18

குரைக்கும், துரத்தும் சில சமயங்களில் கடிக்கவும் செய்யும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினர் சொன்னது தான். "தெருநாய்களைக் காக்க விரும்புவோர் தங்களையும் காத்துக் கொள்ள விரும்புவோரெல்லாம் ஐந்தாறு நாய்களைத் தத்து எடுத்து வளர்ப்பது ஒன்றுதான். அப்போது அவையும் வீட்டு நாய்களாகிவிடும் நாம் சொன்னபடி கேட்கும்" அன்று கலைஞர் திருமா போன்றோரையும் இன்று நம் முதல்வர் கமலையும் கட்சியில் இணைத்து , பொறுப்பான பதவி கொடுத்ததெல்லாவற்றையும் இதனோடு பொருத்தி பார்த்தால் பிழை உங்களுடையது


Sun
செப் 03, 2025 18:06

என்ன ஆண்டவரே ? பிரதமர் தாயை பேசியது ,ஓட்டு திருட்டு இதுக்கெல்லாம் பொசுக்குனு பா.ஜ.க மெம்பர் மாதிரி பேசிப்பிட்டீங்க. அப்புறம் உங்க ஓனர்ஸ் கோவிச்சுக்க போறாங்க.


M Ramachandran
செப் 03, 2025 17:36

சுற்றியம் நாலு பேர்.


M Ramachandran
செப் 03, 2025 17:35

கழுதையை பற்றி கழுதைக்கு தான் நல்லாத்தெரியுமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை