உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்

மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' வட்டச்செயலாளருடன் பேசியதற்கு என்னை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை,'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச்செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.இது தொடர்பாக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது. போலீசார் நடவடிக்கை எடுத்து ஐந்து மாதத்தில் அதிக தண்டனையை பெற்று கொடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.அண்ணாமலை கூறியதை நானும் பார்த்தேன். அவர், சண்முகம் என்ற வட்டச் செயலாளர் என்னை அழைத்ததாக தெரிவித்து உள்ளார். இது ஒரு குற்றச்சாட்டா? என் கையில் 83 வட்ட செயலாளர்கள் உள்ளனர். நான் மாவட்ட செயலாளர். என் தலைமையிலான நிர்வாகத்தில் 82 வட்டச் செயலாளர்கள் உள்ளனர்.ஒவ்வொரு நாளும் 10 - 15 பேர் எனக்கு போனில் அழைப்பார்கள். வட்ட செயலாளர் போன் செய்தார். இதனால், சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என சொல்கின்றனர். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமா என தெரியவில்லை. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Ramalingam Shanmugam
ஜூன் 04, 2025 15:28

குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றி பேசியது என்ன


Ramasamy
ஜூன் 04, 2025 15:26

பேசினது தப்பி ல்லை , குற்றவாளியுடன் பேசியது எதனால் ?


NATARAJAN R
ஜூன் 04, 2025 15:08

ஞான சேகரன் வீட்டுக்கு சென்று பிரியாணி சாப்பிட்டது நீங்கள். அவன் திமுக அனுதாபி சொன்னது சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர். குற்றம் நடந்த மறுநாள் ஞான சேகரனை காவல்துறை அழைத்து விசாரணை நடத்தி விட்டு விட்டது. மறு நாள் கைது செய்தது. அண்ணாமலை உங்களை குற்றவாளி என்று சொல்லவில்லை. ஏன் உங்களை விசாரிக்க வில்லை என்றுதான் கேட்டார். ஏன் பதற்றம் உங்களுக்கு? ஏற்கனவே அவன் மீது 10 க்கும் மேற்பட்ட கடும் கிரிமினல் வழக்குகள் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவுடன் அது பற்றி ஏதும் தெரியாமல் அவர் வீட்டில் விருந்து கண்டீர்களா?


SUBRAMANIAN P
ஜூன் 04, 2025 14:02

ஆட்சி மாற்றம் நடந்த அடுத்த ஐந்து மாதங்களில் ....


N Annamalai
ஜூன் 04, 2025 10:11

பதட்டம் தெரிகிறது ஏன் ?.


theruvasagan
ஜூன் 04, 2025 08:38

பேசினது குற்றமில்லை. குற்றம் நடந்த பிறகு அதைப் பற்றி பேசியது என்ன என்பதுதான் கேள்வி சார்.


Minimole P C
ஜூன் 04, 2025 08:23

Ma.Su pleading ignorance believing that as usual TN people are ignorants. That circle head only talked to crime committer on various occations on day of his arrest etc. Ma.Su. photos with GS also released. Even assuming that Ma.Su is ignorant the police must enquire him as he is the boss to GS in the party.. Even pleaded ignorance that must be recorded.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 04, 2025 06:53

உண்மை எப்போதும் சுருக்கமாய் பேசப்படுகிறது பொய்தான் விரிவாகப் பேசப்படும். -லியோ டால்ஸ்டாய் ... உண்மை விரைவில் வெளிவரட்டும் ... அப்பாவி பெண்களுக்கு நியாயம் கிடைக்கட்டும் ...


V K
ஜூன் 04, 2025 04:30

என்ன சுப்புனி மாட்டிகிட்டயா


Kasimani Baskaran
ஜூன் 04, 2025 04:11

இது போல எத்தனை வட்டச்செயலாளர்களிடம் மாசு மற்றும் அவரது எஜமானர் போன்றோரின் கைத்தொலை பேசி ஏன் பதிவில் இருக்கிறது, எத்தனை முறை தொடர்பு கொண்டார்கள் என்பதையும் ஆய்வு செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை