உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரம் தாழ்ந்து பேசுவதா? அண்ணாமலைக்கு த.வெ.க., கண்டனம்

தரம் தாழ்ந்து பேசுவதா? அண்ணாமலைக்கு த.வெ.க., கண்டனம்

மதுரை: ''கைது செய்ய வேண்டிய இடத்தில் உள்ள பா.ஜ.,வினரே தமிழகத்தில் ஏன் மதுபான ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கண்ணியமான, மரியாதையான வார்த்தைகளில் தான் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனால் அண்ணாமலை தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து த.வெ.க., தலைவர் விஜய்யை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது'' என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மதுபான ஊழல் விஷயத்தில் சிக்கியவர்களை, கைது செய்ய வேண்டிய இடத்தில் பா.ஜ., அண்ணாமலை உள்ளார். ஆனால் அவர் தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதாகிறார். இதைத்தான் எங்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை தலைவர் விஜய் பற்றி, 'இடுப்பை கிள்ளுபவர்' என தவறாக பேசியுள்ளார்.கதைகளை, காவியங்களை மட்டுமல்ல கடவுளையும் சாமானிய மனிதர்களுக்கு தத்ரூபமாக காட்டியது சினிமா தான். ஆனால் சினிமா என்றால் இடுப்பை கிள்ளுவது தான் அண்ணாமலை நினைவுக்கு வந்துள்ளது. ஹேமமாலினி, கங்கனா ரனாவத், சுரேஷ்கோபி, சரத்குமார் என சினிமா கலைஞர்கள் பா.ஜ.,வில் நிரம்பியுள்ளனர். வானதி, தமிழிசை போன்ற பெண் தலைவர்களே அண்ணாமலையின் இந்த பேச்சை கேட்டு முகம் சுளித்திருப்பார்கள். இனிவரும் காலத்தில் இதுபோன்று பேசாமல் இருப்பது அண்ணாமலைக்கும் நல்லது, அவர் பதவிக்கும் நல்லது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Azar Mufeen
மார் 20, 2025 22:50

சிம்ரன் படத்தில் கங்கனா திருடியாக நடித்திருப்பதால் அவருக்கு திருட மட்டும்தான் தெரியும் என்று அண்ணாமலை பேசமுடியுமா


Yuvaraj Velumani
மார் 21, 2025 21:11

திருட்டு கும்பல் லவ் ஜிகாத் உனக்கு ஏன் எரியுது


kulandai kannan
மார் 20, 2025 17:57

சில நேரங்களில் அண்ணாமலையின் பேச்சுக்கள்/செயல்கள் நியாயப்படுத்த முடியாதவையாக உள்ளன


Subburamu Krishnasamy
மார் 20, 2025 17:40

Joseph Vijay is not a Saint, his party policies are in no way differ from other dravidian parties. His entry to politics itself is a gimmicks, doing vote splitting politics to favour the DMK.


SP
மார் 20, 2025 16:25

இவரெல்லாம் கட்சி ஆரம்பித்ததிலேயே தமிழக அரசியலின் தரம் மிக நன்றாக தெரிகிறது


angbu ganesh
மார் 20, 2025 14:18

திவிகே என்ற வார்த்தையை பார்த்தாலே தவங்களை ஞாபகம்தான் வருது அவனே தத்தக்க பித்தக்கான்னு தவழ்ந்து வரான் அண்ணாமலை போன்ற மலையோட மோத எது தெம்பு


angbu ganesh
மார் 20, 2025 14:15

கெட்ட அரசியல் நடத்துற உங்கள வேற எப்படி பேசுவது


சங்கவி
மார் 20, 2025 13:49

நீங்க எல்லாம் அறிக்கை விடுறதா


Rajathi Rajan
மார் 20, 2025 13:32

பதில் சொன்னால் நமது தரமும் கெட்டு தான் போகும்.


M Ramachandran
மார் 20, 2025 13:09

தவகளை கட்சி பிறந்ததெ ஸ் டாலின் ஆசியினால். அண்ணாமலையயை ஸ் தள்ளினாள் சமாளிக்க முடியாததினால் தன் ஜால்றா கருப்பு சிவப்பு நிற சைகிளில் சுற்றி தான் ஒரு தீ மு கா காரன் என்று நிரூபித்த ஜோசப்பு விஜய் தனி கட்சியை ஆரம்பிக்க திராணி இல்லை. தீ மு க்கா தான் துணிவு கொடுத்து தம் ஆதர்வாளர்களை கொன்ஜம் அனுப்பி கட்சியை ஆரம்பிக்க வைத்தார். அதனால் என்றும் விஜய ஸ் டாலின் பக்கம். தேர்தல் நேரத்தில் மக்களை மூடர்களாக்கி ஒன்று இணைந்து விடுவார்கள். இது தான் ஸ்டாலின் மறைய்ய முக திட்டம்.


Madras Madra
மார் 20, 2025 12:18

தரமற்றவர்களை தரமற்ற வார்த்தையால் தான் தாக்க முடியும் அதைத்தான் அண்ணாமலை செய்தார் இல்லைன்னா இவனுங்களுக்கு ஒரைக்காது


Karthik
மார் 20, 2025 18:50

முற்றிலும் உண்மையான உண்மை.


முக்கிய வீடியோ