உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தைக்குச் சிலை முக்கியமா? அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தந்தைக்குச் சிலை முக்கியமா? அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? என முதல்வர் ஸ்டாலின் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o29kzm49&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டசபை உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு. 'Out of Contact' முதல்வர் ஸ்டாலின், ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Anantharaman
டிச 12, 2025 08:52

மூலைக்கு மூலை காந்தி நேரு ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி சிலைகள் வழித்தடங்களை மாசு படுத்தும் விகாரங்கள். எல்லாவற்றையும்?அகற்றி ஆக வேண்டும்


Ganesun Iyer
டிச 11, 2025 21:21

முத்தமிழ் வித்தவருக்கு சிலை வைக்கத்தான் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துள்ளனர்..


Enrum anbudan
டிச 11, 2025 18:06

இந்த மாதிரி கொள்ளை கூட்டங்களுக்கு ஒட்டு போடுகின்றவர்களை எதை கொண்டு அடிப்பது


Enrum anbudan
டிச 11, 2025 17:59

கமிஷன் கிடைக்கிற காண்ட்ராக்ட் மட்டும்தான் நாங்க போடுவோம், அதெல்லாம் நீங்க கேட்கக்கூடாது ஹி ஹீ ஹீ ஹீ ,......


K.n. Dhasarathan
டிச 11, 2025 17:40

நல்ல கேளுங்க அண்ணாமலை


ram
டிச 11, 2025 16:34

நல்லா கேளுங்க.. நாக்கை புடுங்கிக்கிறது போலே கேளுங்க.. அந்த அறிவு இருந்தா தமிழ்நாடு எங்கோ போயிருக்கும்.


DMK Thondan
டிச 11, 2025 16:26

எப்பா அது எங்க கொள்கையிலேயே இல்லப்பா,திராவிட மாடல் அப்படி தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மலை


DMK Thondan
டிச 11, 2025 16:26

எப்பா அது எங்க கொள்கையிலேயே இல்லப்பா,திராவிட மாடல் அப்படி தான் இருக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மலை


M.Sam
டிச 11, 2025 16:15

உன்னக்கு பதவி முக்கியமா பைசா முக்கியமா ? உன்னக்கு இரண்டும் முக்கியம் அது அத்திரி தாண்ட உள்ளோம்


vivek
டிச 11, 2025 16:58

அலுமினிய தட்டு


ராஜா
டிச 11, 2025 17:45

உனக்கு 200 ரூபாய் மற்றும் அரிசிப்பை மட்டும் தான் முக்கியம் என்று நன்றாக புரிகிறது.


SULLAN
டிச 11, 2025 16:03

நீ அப்படியே அது போலத்தான்


சமீபத்திய செய்தி