நாடிஜோதிடம் உண்மையா?
ஆசிரியர் : அரவிந்த் சுவாமிநாதன் வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட்., டோல் ப்ரீ : 1800 425 7700 : 75500 09565 பக்கம் : 192 விலை : ரூ.250 நா டிஜோதிடம் பற்றிய விளக்கங்களை கூறும் நுால். நாடிஜோதிடம் என்றால் என்ன, கைரேகையின் பயன்பாடு, நாடிஜோதிட ரகசியங்கள் என பல தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது. ஜீவநாடி குறித்த தகவல்கள் மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. கோனாபட்டு ஏ.பி.சுவாமிநாத சர்மா என்பவரின் நாடிஜோதிடம் பற்றிய குறிப்புகள் வியப்பை தருகின்றன. ஜோதிடம் பார்த்த சிலரது அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் நாடிஜோதிடம் பலிப்பதும், சிலருக்கு பலிக்காமல் போவதும் ஏன் என விளக்கம் தருகிறது. வைத்தீஸ்வரன் கோவில் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. ஜோதிட ஆர்வலர்கள் கையில் இருக்க வேண்டிய நுால். –- பி.எஸ்.என்.,