வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வேஸ்ட்
வேஸ்ட்
யார் என்று யார்க்கும் தெரியாது .
இரண்டு பேரும் தேற மாட்டார்கள்.
இது ஒரு வேஸ்ட் பீஸ்.
இவன் வீணா போவான்
கோபி; அ.தி.மு.க., பொதுச்செயலர் மீதான அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், கோபியில் இன்று மனம் திறந்து பேசவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், கோபி அருகே திருமண மண்டப திறப்பு விழாவில் செங்கோட்டையன் நேற்று பங்கேற்றார். தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதாக அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். ''அவரது மனதில் என்ன எண்ணம் உள்ளது என்பதை, அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு சரி என பட்டதை அவர் செய்திருப்பார். அது குறித்து நான் எதுவும் சொல்வது பொருத்தமாக இருக்காது,'' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8yhq6p8o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடுத்து, ''அ.தி.மு.க., தலைமையிடம் முரண்பட்டு நிற்கும் உங்களை, பா.ஜ., தலைமை சமாதானப்படுத்த முயன்றதா அல்லது பழனிசாமி தரப்பினர் உங்களிடம் பேசினரா,'' என கேட்டனர். ''செப்., 5ல், இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்வேன் என ஏற்கனவே சொல்லி விட்டேன். அதன் அடிப்படையில், நாளை (இன்று) விபரமாக பேசுவேன்,'' என கூறி கைகூப்பி கும்பிடு போட்டு சென்றார்.
வேஸ்ட்
வேஸ்ட்
யார் என்று யார்க்கும் தெரியாது .
இரண்டு பேரும் தேற மாட்டார்கள்.
இது ஒரு வேஸ்ட் பீஸ்.
இவன் வீணா போவான்