உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, பேட்டை ரவுடியா? :தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, பேட்டை ரவுடியா? :தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை,: ''தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பேட்டை ரவுடி போல் பேசியிருக்கிறார்; அவர் அமைச்சரா; ரவுடியா?'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.கோவையில் அவர் அளித்த பேட்டி:ஜாபர் சாதிக் வழக்கில் இருந்து மூத்த நீதிபதி விலகியிருக்கிறார். அவருக்கு, வெளியே இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா என சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. இவ்வழக்கில் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும்போது, பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு, தமிழ்நாடு பாடநுால் கழகத்துக்கு புத்தகம் சப்ளை செய்யும் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளது. ஜாமின் வழக்கில் இருந்து விலகியுள்ள நீதிபதி, காரணத்தை பதிவு செய்யவில்லை.ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட நபர் என்பதால், அது தொடர்பாக விளக்கம் தேவை. தவறான முறையில் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்திருப்பதாக, நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

தவறிய நடுநிலை

சபாநாயகர் அப்பாவு கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும். தொண்டர்களை காட்டிலும் சபாநாயகர் அப்பாவு கட்சிக்காக கூடுதல் வேலை செய்கிறார். சட்டசபையில் வேல்முருகன் கேள்வி கேட்கிறார்; அவர் மீது சபாநாயகர் தாவுகிறார். அதேபோல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மீதும் பாய்கிறார். அப்பாவு நடுநிலை தவறி நடக்கிறார்.தமிழகத்தில் ஆறு பல்கலைகளில் துணைவேந்தர் இல்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் பல்கலை மானியக்குழு நடைமுறையின் கீழ் செயல்பட வேண்டும். தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை.

கல்வியில் அரசியல்

கல்வியில் தி.மு.க.,வினர் அரசியல் செய்வதால், கவர்னர் தன் கருத்தை சொல்கிறார். அமைச்சர் கோவி.செழியன் அரசியல் செய்வதால், கவர்னர் நுழைகிறார். தமிழக கவர்னர் வந்தபிறகே, துணைவேந்தர் நியமனம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடக்கிறது.கடந்த 2012ல், காங்., - தி.மு.க.,வை எதிர்த்து, பார்லிமென்டில் சண்டை போட்டவர் திருமாவளவன். என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகத்தில் ஒரு கார்ட்டூன் இருந்தது.அம்பேத்கரை, நேரு சவுக்கால் அடிப்பது போல் அதில் இருந்தது. அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டத்தை மெதுவாக நகர்த்தியதால், சாட்டையை நேரு சுழற்றியதாக என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகத்தில் இருந்தது.அதை நீக்கியது பா.ஜ., அரசு. அன்றைக்கு காங்., - தி.மு.க.,வை எதிர்த்து போராடியவர் திருமாவளவன். அரசியலுக்காக வேண்டுமென்றே பேசுகிறார் அவர்.

பேட்டை ரவுடியா?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா என்ற சந்தேகம் வருகிறது. காவல் துறை பயிற்சி மையத்தில் ரவுடிகள் 'பரேடு' நடத்தும்போது, ரவுடிகள் எப்படி பேசுவரோ, அப்படித்தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகிறார்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.200ல் டிபாசிட் இழப்பர்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு லட்சணம், லஞ்ச லாவண்யம் குறித்தெல்லாம் முதல்வருக்கு தெரியாதா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி 'டிபாசிட்' இழக்கும். மீதமுள்ள, 34 தொகுதிகளில் டிபாசிட் பெறலாம் அல்லது வெற்றி, தோல்வி அடையலாம். முதல்வர் எண்ணிக்கையை சொல்லும்போது, 234ஐ தாண்டி விட வேண்டாம்; பேச்சுவாக்கில் 250, 300 என சென்று விடக்கூடாது.- அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Narayanan
டிச 24, 2024 11:41

திமுகவில் சாதாரண தொண்டன் முதல் முதல்வர் வரை எல்லோருமே அப்படித்தான்


Matt P
டிச 23, 2024 19:49

மாண்பு மிகு பேட்டை ரௌடியன்னு அழைச்சிட்டா போச்சு. மாண்பு மிகு வேற கொறைச்சலு.


THIRUMALAI KUMAR
டிச 23, 2024 17:12

தி மு க காரங்க அண்ணாமலை பேட்டி கேட்டுத்தான் பதுருவாங்க = இவரு அண்ணாமலை போட்டோ பாத்து பதற்றம் அடையறாரு


sundarsvpr
டிச 23, 2024 11:44

தற்போதைய எல்லா அரசியல்வாதிகள் 1957 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்ட சபை நிகழ்ச்சிகளை அப்போதுள்ள செய்தித்தாள்களை படிக்கவேண்டும். அப்போது ஆளும் காங்கிரஸ் பிரதமர் ராஜகோபாலாச்சாரி எம் பக்தவச்சலம் சி சுப்ரமணியம். எதிர் வரிசையில் ஆந்திர கேசரி பிரகாசம் தென்னட்டி விஸ்வநாதன் நொண்டி ராமமூர்த்தி ப. ஜீவானந்தம் முத்துராமலிங்க தேவர் போன்றோர். அப்போது நடவடிக்கைகள் விவாதங்கள் சுவையாய் இருக்கம் காரணம் சட்டமன்ற நடு நாயகன் சிவசங்கரன் பிள்ளை சட்ட மன்ற விவாத நிகழ்ச்சிகள் செயலக ஆவணத்தில் இருக்கும். ஆர்வம் இருந்தால் அப்பாவு படிக்கலாம் பாடம் படிப்பது நல்லதுதானே


Narayanan
டிச 24, 2024 13:11

படிக்கத்தெரிந்தால் படிக்கமாட்டாரா ?


Kudumi
டிச 23, 2024 09:36

வெளியே ஒன்று பேசிவிட்டு உள்ளே போய் பாத பூஜை செய்ய இவர் என்ன திராவிட தலைவரா, சுத்தமான தமிழர்


Mohanakrishnan
டிச 22, 2024 21:57

அதில் என்ன சந்தேகம். சமீபத்திய நீதிமன்ற உத்தரவுகளும் உச்ச நீதிமன்ற செருப்படியும் எடுத்துக்காட்டு


Ganesh
டிச 22, 2024 14:20

Why the cheif minister not changing tamilnadu Law minister , each time he is transferring all secretary level staffs. Mr. Ragupathy is not sui for this post , he should be removed from ministry . He should focus to resolve the day to day issues by working with Chief justice of Madras High court . First focus how to reduce the pendency of piling up of cases 2. Work with Chief justice and send proposal to resolve Government related cases as early as possible . Dont be like a dump and listening only to the DMK advocates request . 3. Findout a policy how to track record the adjointment for government related cases .


தமிழ்வேள்
டிச 22, 2024 13:45

பேட்டை ரவுடிகள் பஞ்சத்துக்கு ரவுடிகள்..திமுக குண்டன்கள் பிறவி ரவுடிகள் பரம்பரை ரவுடி திருடர்கள்..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 22, 2024 14:54

காங்கிரஸ் எம்எல்ஏ அனந்தநாயகியிடம் அசிங்கமாக பேசியவன் அந்த லிஸ்ட்டுதான் .....


R.MURALIKRISHNAN
டிச 22, 2024 13:40

சரியான கேள்வி ஆனா தெரிந்தும் இந்த கேள்விய கேக்கலாமா?


தமிழ்வேள்
டிச 22, 2024 13:37

அதுல சந்தேகம் என்ன ஜி?


முக்கிய வீடியோ