உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் கூறியபடி அமைதியாக இருக்கிறதா தமிழகம்?: தாளிக்கிறார்கள் கோவை மக்கள்

முதல்வர் கூறியபடி அமைதியாக இருக்கிறதா தமிழகம்?: தாளிக்கிறார்கள் கோவை மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எதிர் கட்சிகள் விமர்சிப்பது போல் தமிழகம் இல்லை. இங்கு மக்கள் அமைதியாக உள்ளனர்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.இது குறித்து, கோவை மக்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்...

'அரசு தீர்வு காண வேண்டும்'

இருக்கும் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். இந்த அரசு தீர்வு காணவில்லை. உதாரணமாக, பதிவுத்துறையில் பல பிரச்னைகள் உள்ளன. பதிவுக் கட்டணம் உயர்வு, முத்திரைத் தாள் விலை உயர்வு என, பல பிரச்னைகள் உள்ளன. அதை அரசு கண்டு கொள்வதில்லை.-ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழில்'

எங்கிருந்து அமைதி வரும்'

தமிழகம் போதையில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வீதிக்கு வீதி டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாழாகி கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அமைதி எங்கிருந்து வரும்?- ரமேஷ் பாபு சுயதொழில்

'

குற்றங்களுக்கு காரணம் வேலையின்மை'

இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. பல குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபட, வேலை இல்லாததுதான் காரணமாக உள்ளது. ரேஷனில் இலவசமாக அரிசி கொடுத்து விட்டால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ முடியாது. இதை தமிழக அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.-அஜித் தனியார் நிறுவன ஊழியர்

'பணம் கொடுத்தால் அமைதியா'

மகளிருக்கு 1000 ரூபாய் பணம் கொடுப்பதால், மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் வாழ முடியுமா? படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுது. வருமானம் இல்லை. இதை எல்லாம் செய்தால்தான், நாடு அமைதியாக இருக்கும்.- ராதாகிருஷ்ணன் தனியார் நிறுவன ஊழியர்

'அமைதிக்கான சூழல் இல்லை'

அமைதியாக வாழவேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகின்றனர். அதற்கான சூழல் தமிழகத்தில் இல்லை. மக்களின் பிரச்னைகளையும், தேவைகளையும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும். சும்மா திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது.- ராகவன் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் '

சட்டங்களை கடுமையாக்கணும்'

தமிழகம் அமைதியாக இருக்கிறது என்றால், இத்தனை கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமை எப்படி நடக்கிறது. சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும். மக்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் அமைதி வரும்.- கருப்புசாமி ஆட்டோ ஓட்டுனர்.'

பிரச்னை இல்லாத நாளே இல்லை'

தமிழகத்தில் பிரச்னை இல்லாத நாளே இல்லை. அப்புறம் எப்படி தமிழகம் அமைதியாக இருக்கும். வெயில் காலம் வந்துவிட்டது. மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். ரோடு குண்டும் குழியுமாக கிடக்கிறது. வார்டு கவுன்சிலர்கள் கண்டுகொள்வதில்லை.- செல்லத்துரை சுயதொழில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S Ramkumar
மார் 31, 2025 09:59

மகளிருக்கு ஆயிரம், மகளிருக்கு பஸ் இலவசம். விலை வாசி ஏறத்தானே செய்யும்.


Anantharaman Srinivasan
மார் 30, 2025 23:31

தமிழகம் அமைதி பூங்காயில்லை. வேறுவழியின்றி 2026 தேர்தலை எதிர்நோக்கி மயான அமைதியோடு காத்திருக்கும் சுடுகாடு. கண்டிப்பாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் விவசாயிகள் பஸ் தொழிலாளர்கள் எதிர்த்து வாக்களிக்க போகிறார்கள்.


xyzabc
மார் 30, 2025 12:20

விடியல் சொல்வதை கண்டுக்காதீங்க


Sampath Kumar
மார் 30, 2025 11:16

அது என்னங்க கோவை மக்கள் மட்டும் தான் விஷயம் தெரிந்தவர்களை மற்ற மாவட்டம் மக்கள் எல்லாம் மக்குகளா


Kjp
மார் 30, 2025 12:58

பதில் சொல்ல திராணி இல்லை. நல்ல சமாளிப்பு


vbs manian
மார் 30, 2025 09:03

ஹிட்லர் ஓட இந்தளவுக்கு திரிக்கவில்லை.


ramani
மார் 30, 2025 08:55

தமிழகத்தில் அமைதியா? ஆனாலும் சுடாலினுக்கு இவ்வளவு நகைசுவை உணர்வு கூடாது.


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 08:12

ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் வயதானவர்கள் வீடு முன்னாள் பழைய லாரிகளை நிறுத்தி வீட்டினை அடிமாட்டு விலைக்கு விற்க வைக்கும் தந்திரம் செய்கிறார்கள் அவர்களுக்கு உதவியாக கழக கண்மணிகள்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 30, 2025 09:00

தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் சேஷகிரி ராவ் அவர்களிடமிருந்து வீடு வாங்கியது எப்படி தெரியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை