உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தர விடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனு விபரம்: மத்திய அரசு நடத்தும் விசாரணையில், சவுரவ் தாஸ் நேபாளி என தெரிய வந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட வைகளை ரத்து செய்ய வேண்டும். நீதித்துறை குறித்தும், குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும், அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். எனவே, அவருடைய சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, 'இது தொடர்பாக, மத்திய அரசுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஜனா
நவ 01, 2026 09:38

இங்கே யாருமே இந்தியன் கிடையாதுன்னு மைய அரசே சொல்லிருச்சே.


GMM
அக் 31, 2026 09:50

கரப்பான் பூச்சி நிர்வாகி தான் இந்தியர் என்று முதலில் நிரூபிக்க வேண்டும். இதில் மோசடி இருந்தால், மத்திய அரசு விசாரித்து தண்டிக்க வேண்டும்.


GUNASEKARAN RANGASAMY
அக் 31, 2026 14:54

உள் துறையும் உளவுத் துறையும் கொட்டாவி+குறட்டை விட்டு தாள கதியில் கெட்ட தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தார்களோ? உள்துறை மந்திரி என்ன செய்கிறார்? வெளியாளாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு கிடைத்திருக்கும் அரசு ஆவணங்களை வழங்கியது யார்? முதலில் அவர்களை நொங்கெடுக்க வேண்டும். ஒருவரோ ஓரிருவரோ அவரவரை அந்தந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டு வைத்தது / வைப்பது மத்திய மாநில அரசுகளின் மன்னிக்க முடியாத குற்றம். இன்னொரு முக்கியமான ஒன்று. அரசு என்பது மக்களால் உருவாக்கப் படுவது. ஒவ்வொரு இந்தியனுக்கும் பொறுப்பு இருக்கு. போனால் போகிறதென்று ஓட்டைப் போட்டு விட்டு அல்லது ஒட்டு களவு போனாலும் கவலையே படாமல் விசிலடித்துக்கொண்டு சினிமா பார்த்து விட்டு பின் வயிறு முட்ட "சுடு தண்ணீர்" ஏற்றிக் கொண்டு கமுந்தடித்து படுத்துக்க கொள்வதல்ல குடி மக்களின் பொறுப்பு. "வெளியாட்களை" கூட்டி வருவது யார்? அவர்களுக்கு, 3BHK வீட்டை 6BHK வாக மாற்றி, நாக்கை பூனை வளைப்பு வளைத்து சப்புக் கொட்டி, வாடகைக்கு விடுவது யார்? நம்மில் பலர் தானே? நம்மில் எத்தனை பேர் சந்தேகத்திற்குரிய வெளியாள் என்று தெரிந்து போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறோம்? வெத்து வசனத்துக்கும் விசனத்துக்கும் குறைச்சலே இல்லை.


Haja Kuthubdeen
நவ 01, 2026 08:27

இந்திய வம்சாவலியா இருப்பார்..அவரும் இந்தியர்தானே....


ராஜா
அக் 31, 2026 09:04

பிறந்தது நேபாள். ஆனால் இந்தியர் ஒருவர் தத்தெடுத்து வளர்த்தார் என்று கேள்வி.


GUNASEKARAN RANGASAMY
அக் 31, 2026 15:01

இவர்களை இனி நம்பி பயனில்லை. சுத்த யூஸ்லெஸ்.


Kasimani Baskaran
அக் 31, 2026 06:37

இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டுக்காரன் பப்புவே முன்னின்று நடத்தும் போராட்டங்களை நீதிமன்றம் ரசிக்கிறது - ஆனால் இவன் மட்டும் என்ன பாவம் செய்தான். மொத்தமாக நசுக்க வேண்டிய தேசவிரோத போராட்டங்களை அண்ணாமலை உட்பட ஒரு நடைமுறை சட்டச்சிக்கல்களாக மட்டுமே பார்ப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கல்.


GUNASEKARAN RANGASAMY
அக் 31, 2026 15:11

வெளிநாட்டுக்காரன் என்று தெரிந்தும் எப்படி, ஏன், எதற்க்காக இது வரை விட்டு வைத்திருக்கிறார்கள், மோடியும் ஷா-வும்?


பைரவன்
அக் 31, 2026 06:05

இந்தியாவின் எல்லையோரத்தில் வாழும் பல பங்களாதேஷ், மியான்மர், நேபாள் குடிமக்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.


GUNASEKARAN RANGASAMY
அக் 31, 2026 15:13

எப்படி? வெளியுறவுத் துறையில் ஓட்டையா ? சுரங்கமே இருக்கும் போல. உடனே அடைக்க வேண்டும்.


ManiK
அக் 31, 2026 05:36

இவனுங்க பற்றியெல்லாம் செய்தி படிக்கற அளவுக்கு நாம் தரம் தாழ்ந்துவிட்டோம்.


GUNASEKARAN RANGASAMY
அக் 31, 2026 15:17

அந்த சூர்ய காந்தைத் தான் கேட்க வேண்டும். அவரை யாருமே கேட்பதில்லை. பத்தவைத்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் பேசாமல் இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை