உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா? இபிஎஸ்க்கு மார்க்சிஸ்ட் சண்முகம் பதிலடி

கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா? இபிஎஸ்க்கு மார்க்சிஸ்ட் சண்முகம் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: அதிமுக, காணாமல் போகிறதா, கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் என இபிஎஸ்க்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பதில் அளித்துள்ளார்.பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ஆகஸ்ட் 08) திருவாரூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3yd5wk1k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விடும் என்று இபிஎஸ் கூறியது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:அதிமுக, காணாமல் போகிறதா, கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். இபிஎஸ் முதல் நாள் ஒன்றும், மறுநாள் ஒன்றும் மாற்றி,மாற்றி பேசுகிறார்.முரண்பாடாக பேசுவதை இபிஎஸ் வழக்கமாக வைத்துள்ளார் முதலில் அவர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரட்டும். அந்த கூட்டணியில் ஏராளமான விஷயங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. அதிமுக, பாஜ கூட்டணியே ஒன்றுபட்ட கூட்டணியாக இல்லாமல் ஒருவர் கூட்டணி ஆட்சி என்பதும், மற்றொருவர் தனித்த ஆட்சி என்பதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி இபிஎஸ் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை