மத்திய அரசு தரும் நிதியை சுருட்டுவதுதான் திராவிட மாடலா?: நயினார் நாகேந்திரன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தூத்துக்குடி: மத்திய அரசு தரும் நிதியை சுருட்டுவதுதான் திராவிட மாடலா என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 4.63 கோடி ரூபாயில், துாத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி - தாப்பாத்தி சாலையை அமைக்காமல், சாலை போட்டதாக, விளம்பர பலகையை மட்டும் வைத்து சென்றிருக்கிறது, தமிழகத்தின் விளம்பர மாடல் அரசு. சாலையின்றி தவிக்கும் கிராம மக்களுக்கு, மத்திய அரசு வழங்கிய திட்டத்தை செயல்படுத்தாமல், நிதியை மட்டும் வாரி சுருட்டிக் கொள்வது தான் திராவிட மாடலா? சாலை அமைக்காத தி.மு.க., அரசை கண்டித்து, துாத்துக்குடி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி உள்ளனர். உடனடியாக, சாலை ஒப்பந்ததாரர் எர்ஷாத் கான் மீது நடவடிக்கை எடுத்து, சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக பா.ஜ., சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு நாகேந்திரன் தெரிவித்தார்