உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைநிற்றலை தடுக்கும் தொழிற்கல்வி; மூடுவிழா நடத்த அரசு திட்டமா?

இடைநிற்றலை தடுக்கும் தொழிற்கல்வி; மூடுவிழா நடத்த அரசு திட்டமா?

கோவை: தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவில் நீண்ட காலமாக ஆசிரியர்கள் நியமிக்காததால், பெரும்பாலான பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.தமிழகத்தில் மேல்நிலை வகுப்பில், பொறியியல், மருத்துவம், விவசாயம், கைவினைத் தொழில்கள் உள்ளிட்ட பல துறையின் உட்பிரிவான செவிலியர் பயிற்சி, பயிர் பாதுகாப்பு, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தையல் உள்ளிட்ட, 15 வகையான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன.தற்போது, 700க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மட்டுமே இப்பாடப்பிரிவுகள் உள்ளன. இதிலும், சில பள்ளிகளில் பி.டி.ஏ., வாயிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் மூலமாகவே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவை தொடர்ந்து, செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவங்கியபோது, 4,000க்கும் மேற்பட்ட பகுதி நேர, முழுநேர, ஒரு பகுதி நேரம், இரு பகுதி நேரம் ஆகிய நான்கு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1978ல் 4,324 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2007ல் 250 பேருக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை புதிய நியமனம் நடைபெறவில்லை. இந்நிலை தொடர்ந்தால், 2030க்குள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவே இல்லாத நிலை உருவாகும். கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களே, தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்கிறார்கள். இது, இடைநிற்றலைத் தவிர்க்கவும், சுயதொழில் துவங்கவும் வழிவகுக்கிறது. இருப்பினும், தொழிற்கல்வி விஷயத்தில் தமிழக அரசு பாராமுகம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

muthukrishna naidu jeyachandhiran
ஜூன் 28, 2025 07:21

ஒன்றிய அரசின் தணிக்கை என்று ஒன்று இருக்கு.அதன் அறிக்கையை ஒன்றிய அரசுமிதிதாதாலும் கவலையில்லை.ஆனால் அரசு மதிக்கவேண்டிய கட்டாயமிருக்கு.அதன் அறிக்கையில் மாணவர்கள் எண்ணைக்கைகுறைந்தால் அதன் ஆசிரியரை குறைக்க வேண்டுமென்று அறிக்கை தரும்.அடுத்த ஆண்டு அந்த அறிக்கை நிறைவேற்ற பட்டிருக்கா என்று கவனிக்கும்.இப்படிகுறைவதுதான் ஆசிரியர் எண்ணிக்கை. வசதி மற்றோர் ஐ.டி.ஐ. படிக்கிறார்கள்.மற்றவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களின் பெற்றோர் இதில் சேர்க்க மாட்டார்களே.


premprakash
ஜூன் 28, 2025 00:55

லட்சத்தில் சம்பளம் குடுத்தா , எப்படி எல்லாருக்கும் வேலை போட்டு குடுக்க முடியும். நம் தலையில் நாமே மண் அள்ளி போட்டு கொண்டோம். திட்டமான சம்பளத்தில் அனைவருக்கும் வேலை என்பதே தீர்வு...


Svs Yaadum oore
ஜூன் 26, 2025 06:32

தொழிற் கல்வி என்றால் அது குலக்கல்வி ...அது திராவிட சமூக நீதிக்கு விரோதமானது.. தமிழ் நாடு ஏற்கனவே படித்து முன்னேறிய மாநிலம்.. இங்கு எல்லோருமே திராவிட கல்வி தந்தை நடத்தும் கல்லுரியில் படித்து என்ஜினீயர் பட்டம் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் ...அதனால் தொழிற் கல்வி இங்கு தேவை இல்லை ... என்ஜினீயர் பட்டம் வாங்கி இங்கு ஆவின் பால் டெப்போவில் பால் பாக்கெட் டெலிவரி வேலை என்று சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி கேட்டது ....அதனுடன் கள்ள சாராயம் விற்பது , கஞ்சா டோர் டெலிவரி , மெத்து கடத்தல் , அடியாள் வெட்டு குத்து என்று பல திராவிட தொழிற் கல்வி இங்கு முன்னேறிய மாநிலத்தில் நன்கு வளர்ந்துள்ளது ..


Mani . V
ஜூன் 26, 2025 04:46

"படிக்காதே குடி" என்பதுதான் திமுக வின் கொள்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை