உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை; விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி காரணமா?

அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை; விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி காரணமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க., ஆளும் கட்சியாக இருக்கும் போதெல்லாம், விழுப்புரம் மாவட்டம் சார்பில் அமைச்சரவையில் யாராவது ஒருவர் இடம் பெறுவது வழக்கம். ஆனால் தற்போதுதான் முதன் முறையாக விழுப்புரம் மாவட்டத்திற்கு (விழுப்புரம், கள்ளக்குறிச்சி) தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன் என கோஷ்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது தான்.விழுப்புரம் மாவட்டம் என்றாலே பொன்முடிதான் அமைச்சர் என்ற நிலை மாறி, தற்போது பொன்முடி உள்ளிட்ட யாரும் அமைச்சரவையில் இடம் பெறாமல் உள்ளது. தி.மு.க., வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாற்றுத் திறனாளி குறித்து பேசி, துரைமுருகன் மன்னிப்பு கேட்டது போல், பொன்முடியும் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டும், பொன்முடி அமைச்சர் பதவியை கட்சி தலைமை பறித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி அமைச்சர் பதவி பறிப்பிற்கு பிறகு, விழுப்புரம் லட்சுமணன் எம்.எல்.ஏ., சங்காராபுரம் உதயசூரியன், செஞ்சி மஸ்தான் ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. ஆனால் கட்சி தலைமை யார் பெயரையும் பரிசீலனை செய்யாமல், ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கொடுக்காமல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.இதற்கு முக்கிய காரணம், சீனியராகவும், ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த பொன்முடியின் அமைச்சர் பதவியை பறித்த பிறகு, அந்த பதவியை வேறு யாருக்கு கொடுத்தாலும் உட்கட்சி பூசல் மேலும் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டுதான், கட்சித்தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. உடையார் சமூகத்தைச் சேர்ந்த பொன்முடி பதவியை பறித்த பிறகு, அந்த பதவியை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணனுக்கு கொடுத்தால். உடையார் சமூகத்தினர் மத்தியில் கட்சி தலைமை மீது அதிருப்தி ஏற்படும்.அதே போல் பொன்முடியின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த உடையார் சமூகத்தைச் சேர்ந்த உதயசூரியனுக்கு கொடுத்தாலும் சிக்கல். அதே போல் பொன்முடியால் கட்சியில் வளர்ச்சி பெற்ற மஸ்தான், நாளைடைவில் பொன்முடிக்கு எதிராக கோஷ்டி சேர்த்து, அவரை எதிர்த்து அரசியல் செய்யும் மஸ்தானுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்தால், பொன்முடி ஆதரவாளர்கள் மத்தியில் கட்சி தலைமை மீது அதிருப்தி ஏற்படும்.இதை கருத்தில் கொண்டுதான் கட்சி தலைமை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல், அமைச்சர் பதவியிலிருந்த நீக்கப்பட்ட பொன்முடியை சமாதான படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் வேறு யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மேலும், பொன்முடியை எதிர்த்து கோஷ்டி அரசியல் செய்பவர்களுக்கு செக் வைக்கும் வகையில் கட்சி தலைமை விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டுமல்ல கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் அமைச்சரவையில் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை என கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் அமைச்சராக

காய் நகர்த்திய மஸ்தான்கட்சி தலைமை பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க போகிறது என தெரிந்து கொண்ட மஸ்தான், சென்னையில் முகாமிட்டு, ஸ்டாலினிடம் நெருக்கமானவர்கள் மூலம் மீண்டும் அமைச்சராக காய் நகர்த்தினார். மஸ்தான் மீண்டும் அமைச்சர் ஆவார் என வடக்கு மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். சமூக வலைதளத்தில் பால்வளத் துறை அமைச்சராகிறார் மஸ்தான் எனவும் பதிவிட்டிருந்தனர். கடைசியில் கட்சி தலைமை மஸ்தானுக்கு மட்டுமல்ல, விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் 'அல்வா' கொடுத்துள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அமைச்சராக

காய் நகர்த்திய மஸ்தான்கட்சி தலைமை பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க போகிறது என தெரிந்து கொண்ட மஸ்தான், சென்னையில் முகாமிட்டு, ஸ்டாலினிடம் நெருக்கமானவர்கள் மூலம் மீண்டும் அமைச்சராக காய் நகர்த்தினார். மஸ்தான் மீண்டும் அமைச்சர் ஆவார் என வடக்கு மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். சமூக வலைதளத்தில் பால்வளத் துறை அமைச்சராகிறார் மஸ்தான் எனவும் பதிவிட்டிருந்தனர். கடைசியில் கட்சி தலைமை மஸ்தானுக்கு மட்டுமல்ல, விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில், ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் 'அல்வா' கொடுத்துள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 29, 2025 17:08

பொன்முடி மூஞ்சியை தினமும் போடவும் பார்க்கும் போதெல்லாம் அவர் மீதும் ஸ்டாலின் திமுக மீதும் கோபம் வர வேண்டும் அந்த கோபம் தான் 2026 தேர்தலில் நல்ல மாற்றம் தரும்.


அப்பாவி
ஏப் 29, 2025 11:13

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு ஆள் இருக்கணும்.


V Venkatachalam
ஏப் 29, 2025 14:45

ஆமா ஆமா கொள்ளை குறைய கூடாது. கூடவே கூடாது. இப்ப கூட ஜாதிய ஒழிக்கிறவனுங்க ஜாதி பார்ப்பதால் யாரையும் போடல. ஜாதி ஒழிப்பு சூப்பர். சூப்பரோ சூப்பர்.


Lakshminarasimhan
ஏப் 29, 2025 07:03

இந்த கட்டுரையில் உள்ள கருத்து தவறு அமைச்சர் பொன்முடி நீக்கத்துக்கான காரணம் கனி அக்கா மற்றும் உதயநிதி கூட்டு தான் இதன் வாயிலாக ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு கொடுத்த அழுத்தம் தான் பொன்முடி அமைச்சர் பதவி நீக்கம் மற்றும் வேறு யாருக்கும் அந்த மாவட்டத்தில் அமைச்சர் பதவி தராமல் தன்னுடைய மருமகனை சமாதான படுத்தும் திட்டமும் தான் காரணம்