உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்முறை விசாரணை சரியான திசையில் செல்கிறதா? அண்ணாமலை சந்தேகம்

பாலியல் வன்முறை விசாரணை சரியான திசையில் செல்கிறதா? அண்ணாமலை சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:அண்ணா பல்கலை மாணவி, தி.மு.க., நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் மொபைல் போனில் பேசியதாக, மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தன் மொபைல் போனை, 'ஏரோபிளேன்' மோடில் வைத்திருந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியில், காவல் துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajarajan
ஜன 05, 2025 10:36

மத்திய உள்துறைக்கிட்ட புகார் கொடுங்க. இந்த வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரிக்கணும்னு உடனே ஒரு வழக்கு போடுங்க. வெட்டி அரசியல் வாதம் வேண்டாமே ப்ளீஸ்.


Siva Subramaniam
ஜன 05, 2025 08:55

It is really good to see the way each and every party in tamilandu is taking this case very seriously. This will definitely bring some fear in the minds of people wanting to misbehave. But with so much influence each party is .. they can easily get the call log of the accused and let the public know on who is that sir ... why are they not doing it . They are lots of cases getting registered each and everyday... why are we not raising our voices or doing something about it..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2025 08:22

மன்னர் விரும்பும் பாதையில் சரியாகச் செல்கிறது அண்ணாமலை அவர்களே .....


Mani . V
ஜன 05, 2025 06:12

ஆமாம், கிழக்கில் இருந்து மேற்கில் சரியான திசையில்தான் செல்கிறது.


சம்பா
ஜன 05, 2025 05:18

விஷயல வீட்டுக்கு அனுப்பு கவர்னர் ஆட்சி அமல்படுத்து