உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்திவீர்களா நீங்கள்?' என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, 'எதற்காககவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா?' என அமைச்சர் மகேஷ் கண்டனம் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qcbwba8o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மீண்டும் 'தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்திவீர்களா நீங்கள்?' என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: சாதாரணமாக ஒரு கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட, போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு சிறப்புரை கூட்டம் என்று சொன்னால் கூட போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு ஆர்ப்பாட்டம் என்று சொன்னால், ஒரு ஊர்வலம் என்று சொன்னால், ஒரு போராட்டம் என்று சொன்னால், போலீசார் வழக்கு போடுகிறார்கள். நான் கேட்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்? எப்படி இப்படி போலீசார் கட்டுப்படாமல் செயல்படுகின்றனர்? தமிழகத்தில் ஊர்வலம் நடத்த கூடாதா? தமிழகத்தில் மக்கள் இயக்கங்கள் நடத்தக் கூடாதா? பாதிக்கப்பட்ட மனிதன் தனது உரிமைக்காக போராட கூடாதா? ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து, கைது செய்து முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து விடுவதனாலே கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா? இவ்வாறு அவர் பேசினார். ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுப்பிய கேள்வி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Gowrisankar C
ஜன 05, 2025 12:29

கடந்த காலங்களில் திமுக-வுடன் கூட்டணி இல்லை என்றால் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் கட்சி காணாமல் போயிருக்கும். இது எல்லாம் தேர்தல் பேரத்தை உயர்த்த பயன்படுமே தவிர ஓட்டு போடும் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.


V RAMASWAMY
ஜன 04, 2025 18:59

இப்படித்தான் இருக்கும், எங்களிடம் கோல் கொடுத்தால் என்ன ஆகும் என்று புரிகிறதா மக்களே?


பாலா
ஜன 04, 2025 18:32

20 கோடியை 40 தாக மற்றும் திட்டம் வேறு ஒரு வெங்காயமும் இல்ல.


PARTHASARATHI J S
ஜன 04, 2025 18:20

இனிமேலும் கூட்டணி தேவையா ?


Vijay D Ratnam
ஜன 04, 2025 16:22

ஏப்பா, அது ஏன் கத்துது. கூட ரெண்டு எலும்புத்துண்டு போடுங்கப்பா. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்த சவடாலெல்லாம் கூட ரெண்டு சீட்டுக்கும் கூட ரெண்டு பொட்டிக்கும்தான் என்பது மக்களுக்கு நல்லா தெரியும். ஸ்டாலின் மட்டும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும், 2024 பாராளுமன்ற தேர்தலிலும் கழட்டி உட்டிருந்தால், தமிழ்நாட்டில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் காலாவதியாகி கருமாதி நடந்திருக்கும். தோ தோன்னா மூஞ்ச நக்கும்னு ஒரு பழமொழி உண்டு.


M S RAGHUNATHAN
ஜன 04, 2025 16:00

அறிவிக்கப் படாத அவசர நிலை என்றால் அதை எதிர்த்து வெளியே வரவேண்டியது தானே. முதல் தடவை இந்திரா அவசர நிலை அறிவித்தபோது இடது கம்யூனிஸ்ட் அன்றைய ஜனசங்கத்துடன் இணைந்து போராடியது நினைவிற்கு வருகிறதா தோழரே ? 1989 இல் VP சிங் அமைச்சரவைக்கு நீங்களும், பிஜேபி யும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது மறந்து விட்டதா ? கேரளாவில் " ராஜன்" வழக்கு குழி தோண்டி புதைத்து விட்டீர்களா? காங்கிரஸுடன் உறவு வைத்து இருக்கிறீர்கள். வெட்கமாய் இல்லை.


sankar iyer
ஜன 04, 2025 15:31

கேளுங்க ஞாயம் கிடைக்கும்


KRISHNAN R
ஜன 04, 2025 15:17

சும்மா தமாசு... போல


krishna
ஜன 04, 2025 14:51

UNDI KULUKKI GOPALAPURAM KOTHADIMAI 25 KODI KAIPULLA KITTA VAANGIYA PODHU INITHADHU.IPPO ENNA VEKKAM KETTU POYI DHIDIR ROSHAM.


Madras Madra
ஜன 04, 2025 14:00

அன்றைக்கு அண்ணாமலை சாட்டை அடியை கேலி பேசின கம்மி மேதை இன்னிக்கு என்னா சேம் சைடு கோல் அடிக்குது மக்கள் எழுச்சியை பாத்து பயமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை