உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.,க்கே இந்த நிலையா: தமிழச்சி புகாருக்கு அண்ணாமலை பதில்

எம்.பி.,க்கே இந்த நிலையா: தமிழச்சி புகாருக்கு அண்ணாமலை பதில்

சென்னை: ''ஒரு எம்.பி.,க்கே இந்த நிலையா,'' என்று கேள்வி எழுப்பி புகார் கூறிய தி.மு.க., எம்.பி., தமிழச்சிக்கு, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.டில்லியில் இருந்து சென்னை வருவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் சமூகவலைதளப் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், பிஸினஸ் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி, தன்னுடைய டிக்கெட் எகானமி வகுப்புக்கு மாற்றப்பட்டு இருந்ததாக கூறியிருந்தார்.'இதை ஏற்கவே முடியாது. ஒரு எம்.பி.,யை இப்படி நடத்த முடியும் என்றால், மற்ற பயணிகளை நீங்கள் எப்படி கையாள்வீர்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே நடுங்குகிறது. பயணிகளின் உரிமை பற்றிய அக்கறையின்மையும், சேவைகளின் தரமும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது' என்று கூறியிருந்த அவர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சரையும் 'டேக்' செய்திருந்தார்.அவரது இந்தப் பதிவை டேக் செய்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவு:இது நடந்திருக்கக் கூடாத ஒன்றுதான். இருந்தாலும், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, தரம் இறக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை கூறுவதற்கு இதுவே சரியான நேரம். 'ஒரு எம்.பி.,க்கே இந்த நிலைமையா' என்ற பேச்சு, வாரிசு அரசியலில் திளைப்பவர்களின் மனப்பான்மையை காட்டுகிறது. விடியல் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு, கடந்த 4 ஆண்டுகளாக தமிழக மக்களை இருளில் தள்ளியுள்ளனர். தி.மு.க., ஆட்சியின் கீழ் மக்களின் நிலைமையை விவரிக்க 'தரம் இறக்கப்பட்ட' என்ற சொல் கூட மிகவும் மென்மையானது போலவே தெரிகிறது.கசப்பான உண்மையை தெரிவிப்பதற்கான கடவுளின் வழி இது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 89 )

Natarajan Ramanathan
பிப் 20, 2025 10:34

டிக்கெட்டில் இவர் பெயர் சுமதி என்று இருக்கிறதே. அப்படியென்றால் தமிழச்சி என்பதெல்லாம் இங்கு ஏமாற்ற வைத்துக்கொண்ட பெயரா? ஓசியில் பயணம் செய்யும் நாதாரிகளுக்கு எதற்கு பிசினெஸ் வகுப்பு? சரக்கு விமானத்தில் வந்தால் போதாதா?


Dharmavaan
பிப் 19, 2025 18:06

எம் பி க்கே என்றால் ம்பு முளைத்தவளா இவள் ஒட்டுப்பிச்சை எடுத்து பதவிக்கு வந்து கொள்ளை அடிக்கும் கூட்டம் பெரிய ராஜ பரம்பரையா. மூன்றாம்தர கூட்டம் மூடர்களின் ஒட்ட்டினால் வந்த ஆணவம்


Dharmavaan
பிப் 19, 2025 18:06

எம் பி க்கே என்றால் கம்பு முளைத்தவளா இவள் ஒட்டுப்பிச்சை எடுத்து பதவிக்கு வந்து கொள்ளை அடிக்கும் கூட்டம் பெரிய ராஜ பரம்பரையா. மூன்றாம்தர கூட்டம் மூடர்களின் ஒட்ட்டினால் வந்த ஆணவம்


Velusamy Dhanaraju
பிப் 16, 2025 21:15

ஓசி டிக்கெட் அப்பு ...நுகர்வோர் கோர்ட் போகமுடியாது அப்பு...


K V Ramadoss
பிப் 16, 2025 02:31

ஒரு எம் பி க்கே என்கிற சொற்களில் அகங்காரம் தொனிக்கிறது. வேண்டுமென்றே ஏர் இந்தியா செய்திருக்காது. பொது மக்கள் பணத்தில் பயணம் செய்யும் இந்த எம்.பி. ஒருநாள் பொதுமக்களுடன் எக்கனாமி வகுப்பில் பயணம் செய்தால் குறைந்தா போய்விடுவார் ? பணிவும் இல்லை, எளிமையும் இல்லை.


Muthu Kumaran
பிப் 15, 2025 17:35

கனிமொழி அம்மையார் இண்டிகோ விமானத்தில் economy கிளாஸ் பயணம் செய்யும் போது உங்களுக்கு என்ன ???


KRISH PANCH
பிப் 15, 2025 10:53

தாங்கள் பொது மக்களின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளிர்கள். எனவே மக்களின் வரி பணத்தில் சொகுசு பயணத்தை தவிர்த்து இருக்கலாமே. விமான பயணம் சுமார் மூன்று மணி நேரம்தானே.


Sampath Kumar
பிப் 15, 2025 08:41

ஒரு கட்சி தலைவரு உங்களை நம்பி ஓரு கூட்டம் , என்ன உள்ள தமிழ் நாட்டில் யாருக்குல்லாம் கோபம் வருகிறதோ அவன் உடன அரசியலில் குதிக்க தயங்குவது இல்லை. இந்த நிலை நீடித்தால் நாட்டில் வாக்காளர்களை விட அர சியல் கட்சிகள் தான் அதிகமாக இருக்கும்


VRM
பிப் 15, 2025 05:01

அவங்க கட்சி தலைவரே ட்ரைன்ல டிக்கெட் எடுக்காம டாய்லெட்ல ஒளிஞ்சு சென்னை போனவரு.இதெல்லாம் அந்த ஓசி பயண MP க்கு யாராவது எடுத்துசொன்னா பரவாயில்ல.


Kalyanam Siv
பிப் 15, 2025 04:34

வாரிசு அரசியலில் திளைப்பவர்களின் மனப்பான்மையை காட்டுகிறது. சரிதான்


புதிய வீடியோ