உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறைகளில் ஒதுங்க இடமின்றி பரிதவிக்கும் காவலர்கள்; கைதிகளின் கழிப்பறைகளை பயன்படுத்தும் பரிதாபம்

சிறைகளில் ஒதுங்க இடமின்றி பரிதவிக்கும் காவலர்கள்; கைதிகளின் கழிப்பறைகளை பயன்படுத்தும் பரிதாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:தமிழக சிறைகளில் காவலர்களுக்கென தனி கழிப்பறை வசதி இல்லாததால் 'அவசரத்திற்கு' கைதிகளின் கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய பரிதாபத்தில் உள்ளனர். பெரும்பாலும் திறந்தவெளியைதான் பயன்படுத்துவதாக புலம்புகின்றனர்.தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. ஒவ்வொரு சிறையிலும் 11 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை வீதம் 600 முதல் 700 கழிப்பறைகள் உள்ளன. இரவில் மட்டும் பயன்படுத்த ஒவ்வொரு 'பிளாக்'கிலும் ஒரு கழிப்பறை உண்டு. இவர்களை 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். இவர்களுக்கு சிறை வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை. கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறை அல்லது அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சில காவலர்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். சிறைத்துறையை நவீனமாக்கப்பட்டு வரும் நிலையில் காவலர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.காவலர்கள் கூறியதாவது: ஒவ்வொரு 'பிளாக்' அருகிலும் 60 கழிப்பறைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இப்படி சிறை முழுவதும் ஆங்காங்கே கைதிகளுக்கு இவ்வசதி உள்ளது. ஆனால் எங்களை பற்றி சிறைத்துறை கவனத்தில் கொள்ளவில்லை. அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் 'கட்டம்' கட்டப்படுவோம் என பயந்து நாங்கள் சொல்வதில்லை. 'அவசரத்திற்கு' கைதிகளின் கழிப்பறையை பயன்படுத்தி வருகிறோம். அல்லது திறந்தவெளியை பயன்படுத்துகிறோம். எங்களுக்கென பிரத்யேக கழிப்பறைகள் அமைக்க போதிய இடவசதி உள்ளது. இதுகுறித்து சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நாஞ்சில் நாடோடி
மே 23, 2025 11:15

சிறைத்துறையில் நடைபெறும் ஊழலில் திளைக்கும் விடியல் அரசு.


RAMAKRISHNAN NATESAN
மே 23, 2025 11:06

மேற்குவங்கச் சிறைகளில் பெண்கைதிகள் பலர் கர்ப்பமாயினர்... இது கடந்த ஆண்டு பலத்த விவாதத்தை எழுப்பியது ..... காரணம் சிறைக்காவலர்கள் இல்லாமல் வேறு யார் ?


Padmasridharan
மே 23, 2025 10:59

"அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கட்டம் கட்டப்படுவோம் என பயந்து நாங்கள் சொல்வதில்லை" கட்டம்னா என்னங்க சாமியோவ்.


அப்பாவி
மே 23, 2025 10:55

திறந்த வெளியா? ஜீ க்கு தகவல் குடுங்க. 2018 லேயே ஒழிச்சாச்சே.


N Sasikumar Yadhav
மே 23, 2025 15:35

ஏன் சிறைத்துறைக்கு பொறுப்பான உங்க கோபாலபுரத்திடம் தானே சொல்ல வேண்டும் . உடனே உங்க வாடகை வாயை எதற்கு ஜியிடம் கொண்டு செல்கிறீர்கள்


Mecca Shivan
மே 23, 2025 06:23

காவல் துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாக சொல்லப்படும் இடம் சிறைத்துறை ..ஆகவே அவர்களுக்காக பரிதாபடுவது வேண்டாத ஒன்று ..


சமீபத்திய செய்தி