உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிச.,13ம் தேதிக்காக நானும் காத்திருக்கிறேன்: அண்ணாமலை

டிச.,13ம் தேதிக்காக நானும் காத்திருக்கிறேன்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: '' எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றிருப்பது, சாட்சியங்களுக்கு அழுத்தத்தை உருவாக்காதா?' என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்து விழுப்புரத்தில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மிக வேகமாக, செந்தில்பாலாஜி ஜாமினில் வந்த உடன் வேகமாக அமைச்சர் பதவி, முக்கிய துறை கொடுத்துள்ளனர். கோவை விழாவில், முதல்வர் ஸ்டாலின் , 'எனது மகன் உட்பட தி.மு.க.,வில் உள்ள அமைச்சர்களை பார்க்கும்போது செந்தில்பாலாஜி தான் சிறந்தவர் எனப் பேசியதை' மேற்கோள் காட்டுகிறேன். இது, செந்தில்பாலாஜி ஜாமினில் வெளியே வந்து, அமைச்சர் பதவி ஏற்றபிறகு இரண்டு வாரத்தில் மேடையில் அமர்த்திக் கொண்டு வாசிக்கிற பாராட்டுப் பத்திரம். இதை எல்லாம் சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறது.அதைத்தான் நீதிபதி கூறுகிறார், 'இவ்வளவு வேகமாக மாநில அரசு முக்கியமான பதவி கொடுக்கிறது என்றால், அவர் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்பு அதிகம்' என்று.சுப்ரீம் கோர்ட் அவரை நிரபராதி என்று கூறவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். இதன் பிறகு ஏன் சிறையில் இருக்க வேண்டும் வெளியில் போங்கள் என ஜாமின் கொடுத்துள்ளனர்.இதை மக்கள் பார்க்கிறார்கள். நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் கூட மக்கள் இதை உற்று பார்க்கின்றனர்.எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் தப்பித்தாலும் மக்கள் கோர்ட்டில் தப்பிக்க வேண்டும். அதற்கு எல்லாம் பெரிய பதில் 2026ல் கொடுப்பார்கள் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது.இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் 13ம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது. அன்று கடுமையான கருத்து தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அன்றைய தினம், அவர் பொறுப்பில் இருக்க வேண்டுமா? துறையில் கையெழுத்து போட வேண்டுமா? நிதி சார்ந்த அதிகாரம் இருக்க வேண்டுமா? குற்றம்சாட்டப்பட்டவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவர், முகாந்திரம் உள்ள வழக்கில் அரசு அதிகாரிகள் போல் அதிகாரம் கொடுக்க வேண்டுமா என பார்ப்பார்கள். அன்றைய தினம் நீதிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதை கேட்க நானும் காத்துக் கொண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Murugesan.P
டிச 10, 2024 13:55

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியல் உச்சநீதி மன்றத்தால் மீண்டும் நிரூபிக்கப்பட வேண்டும் அதுவே கோடான கோடி மக்களின் எதிர்பார்ப்பாக அமையும்


s chandrasekar
டிச 10, 2024 06:49

வாய்ப்பில்லை ராஜா.


Tirunelveliகாரன்
டிச 08, 2024 14:08

2026ல் அவர் வெளியில் இருந்தால் நீ காலி என்பது எல்லோருக்கும் தெரியும்


Senthil kumar
டிச 06, 2024 21:51

சட்டங்களை கடுமையாகி காலதாமதமின்றி விரைவான தீர்ப்பு அளிக்கவேண்டும்


Ramar P P
டிச 06, 2024 17:21

இது செந்தில் பாலாஜியைப் பார்த்து நீதிமன்றம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை.முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து தமிழக மக்கள் கேட்க வேண்டிய கேள்வி.


R.Balasubramanian
டிச 06, 2024 14:28

உண்மை பெயரில் எழுத ஏன் தயக்கம்? இந்தியன் என்று பெயர் வைத்து ஏன் தேச விரோத கமெண்ட்


INDIAN
டிச 05, 2024 10:14

அதெல்லாம் சரி , உங்கள் கை கடிகாரம் வாங்கியதற்கான பில் கையில் எழுதி கொடுத்தீர்கள், அதுவும் 3 லட்சம் ரொக்க பணமாக பரிமாற்றம் செய்ததாக கூறினீர்கள் இதற்க்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா?


sankar
டிச 05, 2024 11:05

தம்பி சூப்பரா பேசுறியே - கோமாவுல கிடந்தியா


Karuna Karunamoorthy
டிச 05, 2024 21:01

அண்ணாமலை அரசு பதவியில் இருக்கவில்லை அவர் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை


S Hariharasubramanian
டிச 04, 2024 18:55

ரொம்ப சரி


Naveen Cr
டிச 04, 2024 17:19

திராவிட மாடல் .... எதனையும் செய்யும்...


doss
டிச 04, 2024 16:16

ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல். செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தில் வாங்கிய சம்பளமே ஊழல் பணத்தைக்காட்டிலும் அதிகமாக இருக்கும்.காவல்துறையும் நீதித்துறையும் விரைந்து செயல் பட்டால்தான் குற்றவாளி தண்டிக்கப்பட முடியும்.இல்லை அவன் தப்பித்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை