உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மை குற்றவாளிகளை கைது செய்வது அவசியம்!: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

உண்மை குற்றவாளிகளை கைது செய்வது அவசியம்!: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதற்கு தி.மு.க., வெட்கி தலை குனியவேண்டும். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 15 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் தி.மு.க., நிர்வாகி என கூறப்படுகிறது.* வி.சி.க., தலைவர் திருமாவளவன்: அண்ணா பல்கலை மாணவியிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்கள் பழக்கம், தேசிய அளவிலான பிரச்னையாக உள்ளது. போதை பழக்கத்தால், கல்வி நிறுவனங்கள், பல்கலைகள் உள்ளிட்ட இடங்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தை, அரசு தீவிரமாக எடுத்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்: பாலியல் வன்முறை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் குறித்த முழு விபரத்தை, பொது வெளியில் வெளியிட்ட, போலீஸ் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதது, போலீஸ் துறை மீது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை