உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எளிமையான பிரசாரமாக இருக்க வேண்டும்

எளிமையான பிரசாரமாக இருக்க வேண்டும்

சென்னை:''ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, தி.மு.க., அரசு என, எளிமையாக புரியும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் லோக்சபா தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.அக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வரும் 26ம்தேதி, மாலை 7:00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணாதுரை நினைவிடம் திறக்கப்படுகின்றன. பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்நினைவிடங்கள் திறப்பு விழாவில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.உரிமைகளை மீட்க, 'ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் லோக்சபா தொகுதிவாரியாக நடந்த கூட்டங்கள் அனைத்தும், பெரும் வெற்றி அடைந்துள்ளன. மிக பிரமாண்டமாக நடத்தி காட்டி விட்டீர்கள்.பெரும்பாலான கூட்டங்களை, 'டிவி'யில் பார்த்து பிரமித்தேன். இக்கூட்டங்கள், கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.தேர்தலில், 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் ஓட்டுக்கள், அபரிமிதமாக இருக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சியின் திட்டம் பற்றி எளிமையாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, தி.மு.க., அரசு என எளிமையாக புரியும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

'பிறந்தநாள் கூட்டத்தில் 'இண்டியா' தலைவர்கள்'

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'முதல்வரின் பிறந்தநாள் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும்' என்றார்.அதற்கு ஸ்டாலின், 'எனக்கு தனியாக பிறந்தநாள் கூட்டம் நடத்த வேண்டாம்; தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு 'இண்டியா' கூட்டணி தலைவர்களை அழைத்து நடத்தப்படும்' என, பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்