மேலும் செய்திகள்
இடி, மின்னலுடன் 2 நாட்களுக்கு மழை
13-Jul-2025
சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. https://x.com/dinamalarweb/status/1949992308017156280/photo/1 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதியில், இன்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13-Jul-2025