உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் உடன் இணைந்து பயணிப்பது கடினம்; சொல்கிறார் சீமான்

விஜய் உடன் இணைந்து பயணிப்பது கடினம்; சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஈ.வெ.ரா.,வை கொள்கை வழிகாட்டியாக விஜய் ஏற்கிறார். எங்களது கொள்கை வேறு, வழி வேறு. அதனால் அவருடன் இணைந்து வேலை செய்வது ரொம்ப கடினம்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: எங்களுக்கு யாருமே போட்டி இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். இதற்கு முன்னர் பெரிய, பெரிய கட்சிகள் கூட்டணி வைக்கும் போதும், தினகரன் வரும்போதும், கமலஹாசன் வரும்போதும், இவர்கள் எல்லாம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும்போதும் நான் கலங்காமல் களத்தில் நின்று முன்னேறி தான் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் நாங்கள் எடுத்து வைக்கும் அரசியலுக்கும் அவர்களுக்கும் இடையே நிறைய தூரம் இருக்கிறது. அதனால் எனக்கு இவர்கள் யாரும் போட்டி கிடையாது. மாற்று அரசியல்இந்த நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நேசிக்கிற நினைக்கிற, ஒரு மாற்று அரசியல் வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்று நினைக்கிற மக்கள் எங்களுடன் தான் இருப்பார்கள். அதனால் நாங்கள் யாருடனும் சமரசம் செய்து, அணி சேர்ந்து தேர்தல் வெற்றியை அனுபவிக்க முடியாது. மகிழ்ச்சிஎங்களுக்கு இந்த நாடும், அதிகாரமும் தேவைப்படுகிறது. எங்களது கனவு பெரியது. அதனை தனித்து நின்று, வென்று தான் நாங்கள் செய்ய முடியும். நான் ஓட்டிற்கு காசு கொடுப்பானா, இல்லையென்றால் கூட்டம் சேர்ப்பதற்கு காசு கொடுத்து அழைத்து வருவேனா, அது எல்லாம் கிடையாது. எங்களது வேட்பாளர்களை எல்லாம் களத்தில் இறக்கி வேலை நடந்து வருகிறது. த.வெ.க., கொடியில், நான் 15 வருடமாக வைத்திருந்த கொடியை சிவப்பு மஞ்சள் போட்டு வைத்துக் கொண்டார்கள். தம்பி என்னை பின்பற்றி பின்னால் வருவது பெருமையும், மகிழ்ச்சியும் தான்.கூடுதல் வலிமைபரந்தூர் பிரச்னையை முதல் முறையாக வெளியே எடுத்து வந்து சண்டை போட்டது நான்தான். இப்போது தம்பி (விஜய்) அதனை பேசுகிறார் என்றால் எனது கருத்துக்கு கூடுதலாக வலிமை சேர்க்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை போட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது எனக்கு மகிழ்ச்சி தான்.இவர்கள் எல்லாம் ஈ. வெ. ரா இல்லை என்றால் அரசியல் இல்லை என்று சொல்கிறார்கள். எங்களுக்கு ஈ.வெ.ரா.,வால் ஒன்றும் இல்லை. ஈ.வெ.ரா., எங்களுக்கு அரசியலுக்கான குறியீடு ஏதும் கிடையாது. தம்பி முதற்கொண்டு ஈ.வெ.ரா.,வை கொள்கை வழிகாட்டியாக ஏற்கிறார். எங்களது கொள்கை வேறு, வழி வேறு. அதனால் அவருடன் இணைந்து வேலை செய்வது ரொம்ப கடினம். அவர் (விஜய்) மொழி, இனம் என்று பேச மாட்டார். அதனை பிரிவினைவாதம் என்கிறார். எங்களது கோட்பாடு, உலகம் முழுவதும் மொழி, இனம் வழியில் தான் அரசியல் நடக்கிறது. இந்தியாவை இத்தனை மாநிலமாக பிரித்தது மொழிதான். மொழி வழியாக தான் தேசத்தின் வளங்கள், நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதனை தம்பி ( விஜய்) பேச வரவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SIVA
ஜூலை 09, 2025 21:28

இந்த முறை அவர் 5% மேல் ஒட்டு வாங்கினால் அதிசயம் , சென்ற பாராளுமன்ற தேர்தலில் விஜய் ரசிகர்கள் ஓட்டுகள் முழுமையக இவருக்கு வந்தன அது மூன்று முதல் ஐந்து சதவிகிதம் என்று கணக்கில் வைத்தாலும் இவர் ஓட்டு இந்த முறை ஐந்து சதவிகிதத்திற்கு கீழ் தான் ...


M Ramachandran
ஜூலை 09, 2025 20:02

நல்லா ஆக்ட்டிங் குடுப்பார் சினிமாவில் நடிப்பதால்.


தாமரை மலர்கிறது
ஜூலை 09, 2025 19:11

உம்ம கூட உங்கட்சிக்காரனே ரொம்பநாள் வரமுடியாது. ஏனனில் தேர்தலுக்கு முன்னரே, பேரம் பேசி சீமான் ஜெயித்துவிடுவது, கட்சிக்காரனுக்கே கொஞ்ச நாளில் புரிந்துவிடுகிறது. இந்த கட்சியில் இருந்தால் கவுன்சிலர் கூட ஆகமுடியாது என்று புரிந்து ஓடிபோய்விடுகிறான். சீமான் அவரது குடும்பத்திற்காக ஆரம்பித்த கட்சி, ஊரான் சம்பாரிக்கவா கட்சி ஆரம்பித்தார். அதனால் சீமானும் சரி தான்.


sekar ng
ஜூலை 09, 2025 18:56

விஜய் ரசிகர்கள் கூட்டத்தில் மட்டும் பேசியவுடன் பங்களவிற்குள் ஒளிந்து விடுவார். மற்றவை அவர் துணைவியாருக்குத்தான் தெரியும்


Murthy
ஜூலை 09, 2025 17:19

தமிழ் தனித்து இயங்கும் . ......தமிழ் தேசியம் தனித்து ஆட்சி அமைக்கும் . ....


nagendhiran
ஜூலை 09, 2025 16:57

நரி திராட்சை கதைதான் நியாபகம் வருகிறது?


Oviya Vijay
ஜூலை 09, 2025 16:42

இப்படியே பேசிகிட்டுத் திரி ராசா... வாயில வசம்பு வெச்சு தேய்ச்சுப்புடுவாய்ங்க... பார்த்து... விஜயலக்ஷ்மி கேஸுல அடுத்தடுத்த கட்டத்துல எப்படியும் உள்ள போயி களி தின்னு தான் ஆகணும்... ஆமா எங்களுக்குள்ள தனிப்பட்ட உறவு இருந்தது அப்படின்னு என்னைக்கு நீ ஒத்துக்கினுயோ அன்னைக்கே பேஜாரா போச்சுப்பா... உன்ன எப்படி தலைவனா அதுவும் முதல்வனா ஜனம் ஏத்துக்கிரும்...??? அதனால தான் சொல்றேன்... களி திங்க ரெடியா இருந்துக்கோ கண்ணு... எப்படி இருந்தாலும் போன மானம் போனது தானே... போனது திரும்ப வருமோ...???


Sundar R
ஜூலை 09, 2025 16:39

திமுக, நாதக, தவெக, விசிக, மதிமுக, மநீம, IUML, SDPI PFI and Manithaneya Makkal கட்சி ஆகியவை தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத அரசியல் கட்சிகள். மேற்கூறிய கட்சிகளை மத்திய தேர்தல் கமிஷன் ஏன் தடை செய்யவில்லை? நம் தேசத்திற்கு மேற்கூறிய கட்சிகளால் கேடு வந்த பிறகு தான் மத்திய தேர்தல் கமிஷன் விழித்துக் கொள்ளுமா? ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அவர் தேசவிரோதியா? பிரிவினைவாதியா? சமூக விரோதியா? என்பதை தேர்தல் ஆணையம் நேர்காணல் வைத்து அந்த வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டாமா? ஒருவர் கட்சி ஆரம்பித்து மத்திய தேர்தல் கமிஷனில் பதியும் போது, தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத முனைப்போடு அக்கட்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளதா? என்பதை மத்திய தேர்தல் கமிஷன் நன்கு ஆராய்ந்து, அதன்பிறகே அக்கட்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் அல்லவா? மேற்கூறிய காரியங்களை மத்திய தேர்தல் கமிஷன் கவனமுடன் செய்தால் தானே நம் நாடும், நம் ஜனங்களும் நலமுடன் பாதுகாப்பாக வாழமுடியும்? மத்திய தேர்தல் கமிஷன் மேற்கூறிய தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத கட்சிகளை தடை செய்யாவிட்டால், எதிர்காலத்தில் மத்திய அரசுக்கும், மத்திய தேர்தல் கமிஷனுக்கும் இதுபோன்ற சீரற்ற கட்சிகளை ஒழிப்பதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டிவரும்.


Jack
ஜூலை 09, 2025 16:31

தனியா நிற்பதால் பெட்டி வாங்குவது ஆதாயமா இருக்கும் ..நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அப்பா தடுமாறுவதால் கவனிப்பு சூப்பரா இருக்கும் .