உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை; இ.பி.எஸ்.,

பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை; இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: ''பிரிந்தது பிரிந்தது தான். கோவிலாக கருதப்படும் அ.தி.மு.க., அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்கியவர் ஓ.பி.எஸ்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வரும் நிதி தாமதம் ஆகிறது. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடர வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=47h8qsp8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. இப்போதே எந்த செய்தியைச் சொன்னாலும் அது நிலைக்காது.தேர்தல் நெருங்கும் போது கூட்டணிப் பேச்சு நடைபெறும்; அப்போது அனைவருக்கும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தி.மு.க.,வை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல; ஒத்த கருத்துடைய கட்சிகளை நாங்கள் சேர்த்துக்கொள்வோம்.ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம். தி.மு.க.,வை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஆளும் கட்சி அல்ல. காவல் துறை ஏவல் துறையாக மாறி போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.நிருபர்: பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்?இ.பி.எஸ்.,: அவர் எப்ப வேணாலும் பேசி கொண்டே தான் இருக்கிறார்.அது எல்லாம் இனிமேல் சாத்தியம் கிடையாது. பிரிந்தது பிரிந்தது தான். கோவிலாக கருதப்படும் அ.தி.மு.க., அலுவலகத்தை ரவுடிகளை வைத்து தாக்கியவர் ஓ.பி.எஸ்.; அவரை கட்சியில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கட்சியில் இருப்பதற்கே ஒ.பி.எஸ்., தகுதியற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

P. SRINIVASAN
மார் 27, 2025 16:59

ரொம்பதான் தைரியம் இவருக்கு. டெல்லி கூப்பிட்டு சொன்ன ஓகே சொல்லப்போறாரு. அம்மாக்கு அப்புறம் அதிமுக அபேஸ்...


M R Radha
மார் 27, 2025 15:39

ஏங்க உங்கள பத்தி கவலைப்படுங்க. ஒபிஸ் பத்தி அவரு அமித் ஷா பாத்துக்குவாரு. ஒங்கள மாதிரி அவரு எவ்ளோ பேர டீல் பண்ணியிருப்பார் நோ டென்ஷன். கீப் கூல்.


RAVINDRAN.G
மார் 27, 2025 14:52

அதிமுக தேற வாய்ப்பே இல்லை


अप्पावी
மார் 27, 2025 14:41

தேர்தலில் தோத்த பின், ஐயோ.. ஊத்திக்கிச்சு.. ஊத்திக்கிச்சுன்னு பாடும் நிலைமை வந்துறப் போகுது.


Bhakt
மார் 27, 2025 14:29

எல்லோரும் சேர்ந்து இவரை கட்சியில் இருந்து தூக்கிட போறாங்க.


Nallavan
மார் 27, 2025 14:19

அதிமுக எடப்பாடி இல்லாமல் தலைவரை மாற்றினால் ஒழியேல் , கட்சி முன்னேறுவது கடினம்


M R Radha
மார் 27, 2025 15:45

இவரு சொல்லறாரு பெரிய மகா யோகியன் மாதிரி. கட்சி சட்ட திட்டத மாத்தி ஒங்களையே தலைவரா திருத்தி பொதுக் குழுன்ற பேர்ல ஒண்ணை கூட்டி அவரையும் வரவச்சி கல்லு பேப்பர் தண்ணி பாட்டிலே அவரை தாக்கி அவமானப் படுத்தியது போதாதா? வாய மூடி கப் சிப்னு இருங்க .உங்களுடைய லீலைகள் அத்தனையும் அமித் ஷாவ்வுக்கு தெரியும்.


amicos
மார் 27, 2025 14:17

நீங்க கூடத்தான் சாமியா நினைச்சி சசிகலா காலில் தவந்து போய் விழுந்து ,நீங்க கோயில் சாமிய பத்தியெல்லாம் பேசக்கூடாது. தி மு க கூட போட்டி நினைச்சா ஒபிஸ் கூட அரவணைத்து செல்லுங்கள் ஓபிஸ் ன் 19 எம் எல் ஏ உதவி இல்லாது இருந்து இருந்தால் நீங்கள் முதல் அமைச்சராக இருந்து இருக்க முடியாது. ல்


Kumar Kumzi
மார் 27, 2025 13:49

எட்டப்பன் அதிமுகவுக்கு சங்கு ஊதாம விடமாட்டார்


மூர்க்கன்
மார் 27, 2025 16:16

எட்டப்பன்களுக்கெல்லாம் கெட்டப்பன் இந்த பழனியப்பன் அமித் சேட்டு சீட்டு கேட்டு வந்தா .


Narayanan
மார் 27, 2025 13:02

உங்களின் தலைமை நீடித்தால் அதிமுக வெல்லும் என்ற பேச்சுக்கே இடமில்லை


பாமரன்
மார் 27, 2025 12:48

குறுக்கே இந்த கவுசிக் வந்தால்....??? பகோடா கூட மிக்சரையும் கூட்டிகிட்டு தொகுதி உடன்பாடு பேச ஒங்க கோயிலுக்கு வந்தால்??? உள்ளே விடுவீங்களா மாட்டீங்களா??


சமீபத்திய செய்தி