உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23 வரை தடை; ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23 வரை தடை; ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23 வரை தடை நீட்டித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமாறு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஏப்.23ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து, அதுவரை போராட்டம் நடத்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Suman Kumar
மார் 25, 2025 11:15

இதுவே ஸ்டாலின்


rama adhavan
மார் 24, 2025 20:47

அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இந்த ஆணை கட்டாயம் உச்சநீதிமன்றத்தில் அடிபடும்.


Oru Indiyan
மார் 24, 2025 19:33

நீதி அரசரே மாதம் ஏப்ரல் சொன்னீக. தேதி 23 சொன்னீக. வருஷம் சொல்ல மறந்துட்டீக. 2024 ஆ. 2025 ஆ.


...
மார் 24, 2025 19:21

கட்சி கறை வேட்டி கட்டாதகுறையாக வேலை செய்து ஆட்சி அமர்த்திய அரசு ஊழியர்களுக்கு சமர்ப்பனம்


Appa V
மார் 24, 2025 18:26

வெய்யில் உக்கிரகம் அதிகமாக இருப்பதால் மதுக்கடைகளை ரெண்டு மாசம் மூடிவிட்டு இளநீர் கடைகளை திறக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கலாமே


SUBBU,MADURAI
மார் 24, 2025 19:50

திமுகவிற்கு சாதகமாக ஒரேதா அடுத்த வருடம் தேர்தல் முடியிற வரைக்கும் தடை என்று தீர்ப்பளித்தால் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் திமுகவின் RS பாரதி ஏனோ நம் நினைவுக்கு வருகிறார் உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி...


கண்ணகி
மார் 24, 2025 17:57

அப்புறம் நீதிமன்றத்துக்கு லீவு உட்டுருவாங்க. நீதி கிடைச்சுரும்.


அப்பாவி
மார் 24, 2025 17:56

அதுக்கப்புறம் வேலைநிறுத்தம் சென்ஹ்சு வேணுங்கறதைக் கேட்டு நீதிமன்றமே வாங்கிக்குடுத்துரும் நு நீங்க நம்பினா ....


Srinivasan Krishnamoorthi
மார் 24, 2025 17:36

பல் போன பாம்பு கதை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை