உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடங்கியது!

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடங்கியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க இன்று (ஜன.6) மாலை 5 மணி முதல் முன்பதிவு தொடங்கியது. நாளை (ஜன.7) மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லுார்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.madurai.nic.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் அவர்களுக்கான அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும், அலங்காநல்லூரில் 16ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே காளைகள் பங்கேற்க முடியும்.ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜன 07, 2025 02:44

ஜல்லிக்கட்டை தடை செய்வது மாட்டை துன்புறுத்துவதை தடுக்கும். மேலும் வீரவிளையாட்டு என்று இளைஞர்கள் உயிர் இழப்பதையும் தடுக்கும்.


ஆரூர் ரங்
ஜன 06, 2025 20:58

காயமடைந்தால் விழுப்புண்ணாகக் கருதி அப்படியே விட்டுவிடவும். சும்மா இருக்கும் மாட்டை மிரள வைத்த பாவத்துக்கு அனுபவிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை