உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி

ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி

நன்னிலம்: ''விவசாயிகள்,மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தி.மு.க., அரசுக்கு, கம்யூ., கட்சிகள் ஜால்ரா போடுகின்றன,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில், நேற்று, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் நிலை பரிதாபமாக உள்ளது. எங்கள் கட்சியில் சேருங்கள் என ஸ்டாலினும், கட்சியினரும் கெஞ்சுகின்றனர். ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்றபின், தி.மு.க., நலிவடைந்துவிட்டது. அதனால்தான், வீடுதோறும் கதவுகளை தட்டுகின்றனர். ஒரே திட்டத்திற்கு, வேறு வேறு பெயர்களை வைத்து, மக்களை குழப்பி கொண்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு, 12,000 கோடி பயிர் காப்பீடு பெற்று தந்தது அ.தி.மு.க., அரசு. ஆனால், தி.மு.க., அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது.காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க., அரசு. பருத்திக்கு, நியாயமான விலை கிடைக்க அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது.அதன்பின், உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, பருத்தி கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டது. பின், உயர் அதிகாரிகளை கொண்டு, பருத்தி ஏலம் விடப்பட்டது. கிலோ 52 ரூபாய்க்கு எடுக்கப்பட்ட பருத்தி, 74 ரூபாயாக உயர்ந்தது.விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத தி.மு.க., அரசுக்கு, கம்யூ., கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. கம்யூ., கட்சிகளுக்கு தனித்தன்மை வேண்டும். தி.மு.க.,விற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டனர். தி.மு.க.,விடம் பணம் வாங்கிக் கொண்டு மவுனம் காக்கின்றனர்.சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதைப்பொருள், கஞ்சா விற்பனை, பாலியல் கொடுமைகள் அதிகரித்து உள்ளன.குற்றம் செய்பவர்களுக்கு பயம் இல்லை. குழந்தை முதல், பாட்டிவரை பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க.,வை பார்த்து, தி.மு.க., மிரண்டுபோய் உள்ளது. ஸ்டாலின் மாடல் தோல்வி மாடல். இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.L.Narasimman
ஜூலை 19, 2025 12:08

சென்ற இடமெல்லாம் எடப்பாடியாருக்கும் அதிமுகாவிற்கும் சிறப்பாக மக்கள் ஆதரவு தருவதை பார்த்தால் 2026ல் அதிமுக ஆட்சி நிச்சயம் அமையும்.


Thravisham
ஜூலை 19, 2025 14:06

சிறப்பான வரவேற்புன்னுல்லாம் ஒண்ணுமிலீங்க. திருட்டு த்ரவிஷன்கள் பார்முலாவான 500/குவாடெர்/பிரியாணி மற்றும் கூப்டு வருவது போன்றுதான். தானா வரும் கூட்டம் அண்ணாமலைக்கு மட்டும்தான்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 19, 2025 08:55

இபிஎஸ் சார்... காலம் காலமாய் துருப்பிடித்த தகர உண்டியலை குலுக்கிக் கொண்டு வேகும் வெயிலில் வியர்வை சொட்ட சொட்ட சிவப்பு சட்டை அணிந்து கொண்டு... பொதுமக்களிடம் காசு வசூல் செய்யும் நிலைமைக்கு அவர்கள் மீண்டும் செல்ல வேண்டுமா? அதை தவிர்க்க சுலபமாக ஜால்ராவை சத்தமாக சுருதி சுத்தமாக ஆத்மார்த்தமாக லயத்துடன் இசைத்து . .. மார்க்ஸ் , ஏங்கல்ஸ் , லெனின் , மாவோ வாழ்க என்று சொன்ன வாயால் உதயநிதி வாழ்க , இன்பநிதி வாழ்க என்று வயிறுவலிக்க கத்தி கத்தி ஒவ்வொரு தேர்தலுக்கும் கோடிக்கணக்கில் சுலபமாக பெறுகிறன்றனர். அவர்களை பார்த்தால் உங்களுக்கு இரக்கம் தோன்ற வில்லையா? பிரனாயி விஜயன் இன்குலாப் சிந்தாபாத் சொல்லிவிட்டு .. ஒரு சல்லி காசு கொடுக்க மாட்டார்.. வேறெங்கும் கம்னியூஸ்ட்களுக்கு கிளைகள் இல்லை. என்ன செய்வார்கள், திராவிட மாடலிடம் கையேந்தி நிற்கின்றனர்.


Lakshminarasimhan
ஜூலை 19, 2025 08:17

அண்ணன் பழனிசாமி மாஸ் 2026 அதிமுக ஆட்சி அண்ணன் இடப்பாடியார் தலைமையில்


ராஜிமணாளன்
ஜூலை 19, 2025 15:30

எடப்பாடியார் எழுச்சி பயணம் அலை அலையாய் மக்கள் வெள்ளம் அதிமுக ஆட்சி நிச்சயம்..