உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.,!

ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நடந்த ஜானகி எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பேசியது அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னையில் இன்று (நவ.24) நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d1gqitwi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை வரவேற்று வழி நெடுகிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மலர்கள் தூவியும், மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனத்துடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜானகி ஆகியோரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை இ.பி.எஸ்., பார்வையிட்டார். மேடையில் அவர்களின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து, நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார். நூற்றாண்டு விழா நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த எம்.ஜி.ஆர்., பேசும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மிகப்பெரிய திரையில் எம்.ஜி.ஆர்., பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பாக தொண்டர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர். அந்த வீடியோவில் அவர் இ.பி.எஸ்.சை பாராட்டி பேசினார்.சமீபகாலமாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் ஏ.ஐ., மூலம் மறைந்த வி.ஐ.பி.,க்கள் பேசும் டிரெண்ட் பின்பற்றப்படுகிறது. அண்மையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க., பவளவிழாவில் கருணாநிதி ஏ.ஐ., மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
நவ 25, 2024 11:20

அதில் சமாதிக்கு உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை காண்பித்தார்களா? வெளியில் கூட சவுண்டு கேட்குதாமே


Anantharaman Srinivasan
நவ 24, 2024 22:20

ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆர்., இ.பி.எஸ்.சை பாராட்டி பேசினாலும் பொதுமக்கள் ஓட்டளித்து ஆதரவு தந்தால்தான் அரசியல்வாழ்வு.


Raja Vardhini
நவ 24, 2024 21:20

வாழ்த்துக்கள் திரு. எடப்பாடி அவர்களே ....


SIVA
நவ 24, 2024 20:58

என்ன தொழில் நுட்பமோ எங்களுக்கு தினம் இரு நூறு ரூபாய் பேட்டா தந்தே ஆகணும் ....


அப்பாவி
நவ 24, 2024 20:41

ஏற்கனவே கூத்தாடி ஏமாத்துனவங்கதானே..


Ramesh Sargam
நவ 24, 2024 20:05

கருணாநிதி ஏ.ஐ., மூலம் தோன்றி வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதைவிட்டு அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் திருட்டு ரயில் ஏறி, மீண்டும் சென்னை வந்து, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடப்போகிறார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 24, 2024 19:38

வாத்தியார் புகழ் ஓங்குக .....


ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 24, 2024 18:52

அப்படியே அந்த ஏ.ஐ தொழில் நுட்பத்தில் புரட்சித் தலைவி அம்மாவும் எடப்பாடி மற்றும், குஸ்தி பயில்வான் ஜெயக்குமார், அப்புறம் வில்லேஜ் விஞ்ஞானி செல்லூர் ராஜூ, சவால் மன்னன் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், குறிப்பா கே.பி.முனுசாமி போன்ற அதிமுகவின் தலைவர்களை குளோசப்பில் காட்டி அவர்களைபாராட்டிப் பேசியிருந்தால் இன்னும் விழா சிறப்படைந்திருக்கும். அதிமுக தொண்டர்களும் சந்தோஷப் பட்டிருப்பார்கள்.


Rajan
நவ 24, 2024 18:41

அய்யோ பாவம் எம்ஜிஆர். கட்சியை பலப்படுத்துமாறு கூறியிருந்தால் கூட பரவாயில்லை. இபிஸை புகழ இது தேவையா?


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
நவ 24, 2024 18:36

என்ன செய்வது நாமளும் என்னென்னமோ பண்ணி பாத்தாச்சு கட்சி ஒண்ணும் தேறுவது போல தெரியல. கட்ட கடைசியா கட்சியோட இரத்தத்தின் இரத்தங்களை இப்படி எம்ஜிஆர் படத்தை காட்டியாவது ஏமாத்த முடியுமான்னு பாப்போம்.


Anantharaman Srinivasan
நவ 24, 2024 22:24

அடுத்து தெருவில் மோடி மஸ்தான் வித்தை.


சமீபத்திய செய்தி